உள்ளூர் செய்திகள்

ஊட்டி நுழைவுவாயில் பகுதியில் பாய்ந்தோடும் கழிவுநீர்

Published On 2023-06-27 10:14 GMT   |   Update On 2023-06-27 10:14 GMT
  • சுற்றுலா பயணி களும் முகம் சுளிக்கும் நிலை ஏற்பட்டு உள்ளது.
  • தொற்று நோய் பரவும் அபாயமும் ஏற்பட்டுள்ளது.

ஊட்டி,

குன்னூர் தேசிய நெடுஞ்சாலையில் ஊட்டி நகரின் நுழைவு வாயில் சேரிங்கிராஸ் அமைந்துள்ளது. இப்பகுதியில் ஒரு மாத காலமாக கழிவுநீர் அடைப்பு ஏற்பட்டு சாலை முழுவதும் கழிவுநீர் வழிந்து ஓடுகின்றது. இதன் அருகில் கண் ஆஸ்பத்திரியும் செயல்பட்டு வருகிறது. வயதானவர்களும் சிகிச்சைக்காக வருபவ ர்களும் மிகவும் சிரமப்படும் நிலை ஏற்பட்டுள்ளது. மேலும் ஆஸ்பத்திரி பின்புறம் கழிவு நீர் தேங்கி செடிகளுக்கு உரமாக நிற்கின்றது.

இதனால் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகின்றது. மேலும் போக்குவரத்து போலீஸ் துறையினர் அதற்கான தடுப்பை வைத்து போக்குவரத்தை சீர் செய்து வருகின்றனர்.

ஆனால் பாதசாரிகள் மீதும் இரு சக்கர வாகன ஓட்டிகளின் மீதும் வாகனங்கள் செல்லும் பொழுது கழிவுநீர் தெளித்து வருகிறது. இப்பகுதி முழுவதும் துர்நாற்றம் வீசுகின்றது. இதன் கார ணமாக பொது மக்க ளும், சுற்றுலா பயணி களும் முகம் சுளிக்கும் நிலை ஏற்பட்டு ள்ளது. மேலும் தொற்று நோய் பரவும் அபாயமும் ஏற்பட்டுள்ளது.

உடனடியாக நகராட்சி நிர்வாகம் இப்பகுதியில் துரிதமாக செயல்பட்டு கழிவுநீர் கால்வாயில் அடைப்பை சரி செய்ய வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.

Tags:    

Similar News