உள்ளூர் செய்திகள்

தனியார் ஆம்புலன்ஸ் ஊழியர்களுக்கு தனி நல வாரியம், காப்பீடு திட்டம் ஏற்படுத்த வேண்டும் - கலெக்டர் அலுவலகத்தில் மனு

Published On 2022-10-31 15:08 IST   |   Update On 2022-10-31 15:08:00 IST
  • தமிழகம் முழுவதும் சுமார் 25 தனியார் ஆம்புலன்ஸ்கள் செயல்பட்டு வருகிறது. அதில் 1000-க்கும் மேற்பட்ட பணியாளர்கள் ஈடுபட்டு வருகின்றனர்.
  • விபத்து நேரத்தில் துரிதமாக செயல்படும் போது எங்களுக்கு இறப்பு நேர்ந்தால் எங்கள் குடும்பத்திற்கு நிதிஉதவி கிடைப்பதில்லை.

நெல்லை:

தமிழ்நாடு தனியார் ஆம்புலன்ஸ் சங்கத்தை சேர்ந்தவர்கள் நெல்லை கலெக்டர் அலுவலகத்தில் ஒரு மனு கொடுத்தனர். அதில் அவர்கள் கூறியிருப்பதாவது:-

தனியார் ஆம்புலன்ஸ்

தமிழகம் முழுவதும் சுமார் 25 தனியார் ஆம்புலன்ஸ்கள் செயல்பட்டு வருகிறது. அதில் 1000-க்கும் மேற்பட்ட பணியாளர்கள் ஈடுபட்டு வருகின்றோம். முன்கள பணியாளர்களான நாங்கள் இரவு, பகல் பார்க்காமல் பணியாற்றி வருகிறோம்.

ஆனால் எங்களுக்கு விபத்து காப்பீடு, நலவாரியம் உள்ளிட்டவைகள் இல்லை. விபத்து நேரத்தில் துரிதமாக செயல்படும் போது எங்களுக்கு இறப்பு நேர்ந்தால் எங்கள் குடும்பத்திற்கு நிதிஉதவி கிடைப்பதில்லை.

மேலும் எங்கள் குழந்தைகள் கல்வி பாதிக்கப்படுகிறது. எனவே எங்களுக்கு தனிநல வாரியம், அரசு காப்பீடு வழங்க வேண்டும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

நடவடிக்கை வேண்டும்

பாளை தியாகராஜ நகர் 14-வது தெற்கு தெருவை சேர்ந்தவர் ஜெசி கொடுத்த மனுவில் கூறியிருப்பதாவது:-

கடந்த 18 வருடங்களுக்கு முன்பு எனது கணவர் செல்லப்பா இறந்துவிட்டார். எனது மகள் கர்ப்பமாக இருந்த நிலையில் கடந்த ஆண்டு அவர் கொரோனாவால் பாதிக்கப்பட்டார். அவருக்கு ஆண் குழந்தை பிறந்த நிலையில் அவர் உயிரிழந்து விட்டார். இதனால் நான் மட்டும் தனியாக வசித்து வந்தேன்.

இந்நிலையில் எனது உறவினர் ஒருவரின் மகன் என்னை கவனித்துக் கொள்வதாக சொல்லி என்னுடன் தங்கியிருந்தார். அவர் சிறிது நாட்களுக்குப் பின்னர் என்னை ஏமாற்றி என்னிடம் இருந்த 60 பவுன் தங்க நகைகள், என்னுடைய மோட்டார் சைக்கிள் மற்றும் சொத்துக்களை ஏமாற்றி வாங்கிக் கொண்டு தற்போது என்னை கவனிக்க மறுத்து விட்டார்.

எனவே அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். இழந்த எனது சொத்துக்களை மீட்டு தர வேண்டும். ஏற்கனவே இது தொடர்பாக பெருமாள்புரம் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்துள்ளேன். உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இவ்வாறு அதில் கூறியிருந்தார்.

Tags:    

Similar News