உள்ளூர் செய்திகள்

எஸ்.டி.பி.ஐ. சார்பில் ஆர்ப்பாட்டம்.

தஞ்சையில் எஸ்.டி.பி.ஐ ஆர்ப்பாட்டம்

Published On 2022-12-07 09:43 GMT   |   Update On 2022-12-07 09:43 GMT
  • பாபர் மசூதி இடிக்கப்பட்ட தினத்தை கருப்பு தினமாக அனுசரித்து தமிழக முழுவதும் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
  • மதச்சார்பின்மை, அரசியலையமைப்பு சட்டம், ஜனநாயகம் ஆகியவற்றை காத்திட வலியுறுத்தியும் கோஷங்கள் எழுப்பப்பட்டன.

தஞ்சாவூர்:

தஞ்சை ரெயில் நிலையம் முன்பு எஸ்.டி.பி.ஐ‌. கட்சி சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

பாபர் மசூதி இடிக்கப்பட்ட தினத்தை கருப்பு தினமாக அனுசரித்து தமிழக முழுவதும் எஸ்.டி.பி.ஐ. சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது ‌.

இதற்கு மாவட்ட பொதுச்செயலாளர் அப்துல் அஜீஸ் தலைமை தாங்கினார். மாவட்ட துணைத் தலைவர் அப்துல் காதர் தொகுப்புரை வழங்கினார்.

தஞ்சை சட்டமன்றத் தொகுதி தலைவர் முகமது ரபீக் வரவேற்றார். மாவட்டத் தலைவர் ரியாஸ் அகமது தொடக்க உரையாற்றினார். மாநில பேச்சாளர் பிலாலுதீன் கோரிக்கைகளை வலியுறுத்தி பேசினார்.

ஆர்ப்பாட்டத்தில், பாபர் மசூதி இடிக்கப்பட்டதை கண்டித்தும், இந்தியாவின் பன்முகத் தன்மையை காத்திட வேண்டும், மதச்சார்பின்மை, அரசியலையமைப்பு சட்டம், ஜனநாயகம் ஆகியவற்றை காத்திட வலியுறுத்தியும் கோஷங்கள் எழுப்பப்பட்டன.

இதில் மாவட்ட பொருளாளர் சர்புதீன், விமன்ஸ் இந்தியா மூவ்மெண்ட் மாநில பேச்சாளர் தஸ்லிமா ஷெரிப், தஞ்சை சட்டமன்ற தொகுதி செயற்குழு உறுப்பினர் முகமது தாகிர், தமிழ் தேச தன்னுரிமைக் கட்சி பொதுச் செயலாளர் பனசை அரங்கன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News