உள்ளூர் செய்திகள்

1 முதல் 5-ம் வகுப்பு வரை இன்று பள்ளிகள் திறப்பு- மாணவர்களை பன்னீர் தெளித்து வரவேற்ற ஆசிரியர்கள்

Published On 2023-06-14 14:12 IST   |   Update On 2023-06-14 14:12:00 IST
  • நெல்லை, தென்காசி, தூத்துக்குடி மாவட்டங்களிலும் இன்று 1 முதல் 5-ம் வகுப்பு வரையிலான பள்ளிகள் திறக்கப்பட்டது.
  • பள்ளிகள் திறப்பையொட்டி போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர்.

நெல்லை:

தமிழகத்தில் கோடை விடுமுறைக்குப்பின் 6 முதல் 12-ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு நேற்று முன்தினம் பள்ளிகள் திறக்கப்பட்டன. தொடர்ந்து இன்று 1 முதல் 5-ம் வகுப்பு வரையிலான மாணவ-மாணவிகளுக்கு பள்ளிகள் திறக்கப்பட்டன.

பன்னீர் தெளித்து வரவேற்பு

நெல்லை, தென்காசி, தூத்துக்குடி மாவட்டங்களி லும் இன்று 1 முதல் 5-ம் வகுப்பு வரையிலான பள்ளிகள் திறக்கப்பட்டது. இதனை யொட்டி கடந்த 2 நாட்களாகவே பள்ளி அறை கள் சுத்தப்படுத்தப் பட்டு தயார்படுத்தப்பட்டது.

பள்ளிக்கு வருபவர்களை உற்சாகமாக வரவேற்கும் விதமாக பல்வேறு ஏற்பாடு களை பள்ளி தலைமை யாசிரியர்கள் செய்தனர்.

நெல்லை மாவட்டத்தில் உள்ள பள்ளிகளில் இன்று காலையில் மாணவ-மாணவிகளை வரவேற்கும் விதமாக ஆசிரியர்கள் நுழைவு வாயிலில் நின்று சாக்லெட், பூங்கொத்து கொடுத்தனர். ஒருசில பள்ளிகளில் குழந்தை களுக்கு கைகள் மற்றும் கண்ணங்களில் சந்தனம் வைத்தும், பன்னீர் தெளித்தும் ஆசிரியர்கள் வரவேற்றனர்.

புத்தகங்கள் வினியோகம்

மாநகர பகுதியில் இன்று பள்ளிகள் திறப்பையொட்டி போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர். ஏற்கனவே அரசு தொடக்க பள்ளிகள் மாநகராட்சி நிர்வாகம் சார்பில் கிருமிநாசினி தெளித்து சுத்தப்படுத்தப் பட்டது. பள்ளிக்கு வந்த மாணவர் களுக்கு இன்று முதல் நாளிலேயே புத்தகங் கள் வழங்கப்பட்டது. காலை யில் இறை வணக்கத்துடன் பள்ளி கள் தொடங்கின.

இதனையொட்டி மெயின் சாலைகளில் உள்ள பள்ளிகள் முன்பு சற்று போக்குவரத்து நெருக்கடி ஏற்பட்டது. அவற்றை போக்குவரத்து போலீசார் சரிசெய்தனர். அதன் பின்னர் குழந்தைகளுக்கு நீதிபோதனை கதைகளை ஆசிரியர்கள் கூறினர்.

பெரும்பாலான பள்ளி களில் நீண்ட நாட்கள் விடுமுறைக்கு பிறகு மாணவ-மாணவிகள் சென்றதால் ஏதோ புதிய இடத்தை பார்ப்பதுபோல் ஒருவித தயக்கத்துடனே பள்ளிக்கு வந்திருந்தனர். இதுதவிர கடந்த கல்வி யாண்டில் அங்கன்வாடி களில் படித்துவிட்டு புதிதாக தனியார் மற்றும் அரசு பள்ளிகளில் சேர்க்கப்பட்ட குழந்தைகளை பெற்றோர் அழைத்து வந்து அறைகளில் அமர்த்தி வைத்தனர்.

ஆனாலும் அங்குள்ள புதிய ஆட்கள், புதிய சூழ்நிலைகளை கண்டு குழந்தைகள் தேம்பித் தேம்பி அழுதனர். அவர்களை சமாதானப்ப டுத்துவதற்காக ஆசிரியர்கள் அவர்களுக்கு சாக்லெட், பிஸ்கெட், விளையாட்டு பொம்மைகள் கொடுத்த தையும் பார்க்க முடிந்தது. மேலும் சிலர் பள்ளி சுவர்களில் வரைந்துள்ள கார்ட்டூன் பொம்மைகளை காண்பித்து சமாதானப் படுத்தினர்.

ஒருசில குழந்தைகள் அதிக அளவில் அழுது கொண்டே இருந்ததால், அவர்களை பெற்றோர் மீண்டும் வீட்டுக்கு அழைத்து சென்றனர்.

Tags:    

Similar News