கனமழை எதிரொலி - மயிலாடுதுறை, தஞ்சை, திருவாரூரில் பள்ளிகளுக்கு இன்று விடுமுறை
- கனமழை எதிரொலியால் சென்னையில் இன்று பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டது.
- சென்னை உள்பட 4 மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
சென்னை:
வடகிழக்கு பருவமழை கடந்த 29-ம் தேதி தொடங்கியது முதல் தமிழகத்தில் பல இடங்களில் கனமழை பெய்தது. சென்னையை பொறுத்தவரை கடந்த 31-ம் தேதி முதல் மழை பெய்து வந்தது. நேற்றிரவும் பல பகுதிகளில் விட்டு விட்டு மழை பெய்தது.
இதற்கிடையே, சென்னையில் நேற்று மாலையில் இருந்து திடீரென கனமழை கொட்டியது. எழும்பூர், புரசைவாக்கம், சைதாப்பேட்டை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இடியுடன் கூடிய கனமழை கொட்டியது. புறநகர்ப் பகுதிகளிலும் கனமழை பெய்தது. கனமழை எதிரொலியால் இன்று சென்னையில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், கனமழை காரணமாக மயிலாடுதுறை, திருவாரூர் மாவட்டத்தில் உள்ள பள்ளி, கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை அறிவிக்கப்பட்டு உள்ளது. தஞ்சையில் பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.
இதேபோல், திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள ஆவடி, பூந்தமல்லி, பொன்னேரி, திருவள்ளூர் ஆகிய 4 தாலுகாக்களில் பள்ளிகளுக்கு மட்டும் இன்று விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.
மேலும், காஞ்சிபுரம் மாவட்டத்தில் குன்றத்தூர் தாலுகாவில் பள்ளி, கல்லுரிகலுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.