உள்ளூர் செய்திகள்
- நிலம் வாங்கி தருவதாக கூறி மணியிடமிருந்து ரூ.10 லட்சம் பணம் பெற்றுள்ளார்.
- கிருஷ்ணகிரி தாலுகா போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
கிருஷ்ணகிரி,
கிருஷ்ணகிரி சரஸ்வதி நகர் பகுதியை சேர்ந்தவர் மணி (வயது 26). இவரது நண்பர் தூத்துக்குடி மாவட்டத்தை சேர்ந்த ரமேஷ் .
இவர் சென்னையை சேர்ந்த கருணாகரன் என்பவரிடம் இருந்து நிலம் வாங்கி தருவதாக கூறி மணியிடமிருந்து ரூ.10 லட்சம் பணம் பெற்றுள்ளார்.
ஆனால் குறிப்பிட்ட காலத்திற்கு பிறகும் நிலத்தை வாங்கி தரவில்லை. இதையடுத்து தனது பணத்தை திருப்பி கொடுக்கும்படி மணி கேட்டுள்ளார்.
இந்நிலையில் கடந்த ஜூன் மாதம் ரூ.5 லட்சம் பணத்தை மணியிடம் ரமேஷ் கொடுத்துள்ளார். ஆனால் மணியிடம் வாங்கிய ரசீதில் ரூ.10 லட்சத்தையும் பெற்றுக்கொண்டு விட்டதாக நிரப்பி மணியிடம் கையெழுத்து வாங்கி ஏமாற்றியுள்ளார்.
இதுகுறித்து மணி கொடுத்த புகாரின்பேரில் கிருஷ்ணகிரி தாலுகா போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.