உள்ளூர் செய்திகள்
சங்கராபுரம் அரசு ஆஸ்பத்திரியில் தொழு நோயாளிகளுக்கான சிறப்பு முகாம்
சங்கராபுரம் அரசு ஆஸ்பத்திரியில் தொழு நோயாளிகளுக்கான சிறப்பு முகாம் நடைபெற்றது.
கள்ளக்குறிச்சி:
கள்ளக்குறிச்சி மாவட்டம் சங்கராபுரம் அரசு ஆஸ்பத்திரியில் தொழு நோயாளிகளுக்கான ஊனத்தடுப்பு சிறப்பு முகாம் நடைபெற்றது. வட்டார மருத்துவ அலுவலர் சம்பத்குமார் தலைமை தாங்கினார். டாக்டர் பூர்ணிமா, மாவட்ட நலக்கல்வியாளர் அன்புநிலவன், மருத்துவம் சாரா மேற்பார்வையாளர்கள் பொன்னுசாமி, பாலு, ரவிக்குமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர். சுகாதார ஆய்வாளர் சரவணன் வரவேற்றார். முட நீக்கு வல்லுனர் சற்குணம் நோயாளிகளுக்கு ஊன தடுப்புப் பயிற்சியை அளித்தார்.
இந்த முகாமில் கலந்து கொண்ட 25 பயனாளிகளுக்கு ஊன்றுகோல், மூக்கு கண்ணாடி, காலணி, உணவு உண்ணும் கரண்டி உள்ளிட்ட உபகரணங்கள் வழங்கப்பட்டன. இதில் தன்னார்வலர் குணதீபன் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.