உள்ளூர் செய்திகள்

கலைஞர் மகளிர் உரிமைத்திட்ட பயனாளிகளுக்கு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் அனுப்பிய வாழ்த்துச் செய்தியை காண்பித்த பெண்கள்.

என்றென்றும் நன்றியோடு இருப்போம் கலைஞர் மகளிர் உரிமை தொகை

Published On 2023-09-15 16:00 IST   |   Update On 2023-09-15 16:00:00 IST
  • ரூ.1000 பெற்ற குடும்ப தலைவிகள் உற்சாகம்
  • தமிழக அரசின் உரிமை தொகை கிடைக்கப்பெற்ற குடும்ப தலைவிகள் மகிழ்ச்சி

சேலம்

கலைஞர் மகளிர் உரிமை தொகை திட்டத்தின் கீழ் குடும்ப தலைவிகளுக்கு மாதந்தோறும் ரூ.1000 உரிமைத்தொகை வழங்கும் திட்டத்தை முதல்- அமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று தொடங்கி வைத்தார். முன்கூட்டியே மகளிர் உரிமை தொகை வங்கிக் கணக்கில் ரூ.1,000 செலுத்தப்பட்டதால் குடும்ப தலைவிகள் மகிழ்ச்சியில் கொண்டாடுகின்றனர். குறிப்பாக இந்த திட்டம் பொதுமக்கள் மத்தியில் அமோக வரவேற்பை பெற்றுள்ளது. மேலும் இந்த தொகை வைப்பு செய்யப்பட்டதற்கான குறுஞ்செய்திகளை அவர்களின் செல்போனுக்கு அனுப்பி வைக்கப்பட்டன. அறிவித்த நாளுக்கு முன்பாகவே ரூ.1,000 வந்து சேர்ந்ததால் பெண்கள் பெரிதும் மகிழ்ச்சியில் திைழக்கின்றனர்.

சேலம் மாவட்டத்தில் இந்த திட்டத்தை வரவேற்று தமிழக அரசின் உரிமை தொகை கிடைக்கப்பெற்ற குடும்ப தலைவிகள் மகிழ்ச்சி பொங்க பல்வேறு கருத்துக்கள் தெரிவித்துள்ளனர். அதன் விபரம் வருமாறு:-

சேலம்

சேலம் அம்மாபேட்டை பகுதியை சேர்ந்த தனியார் நிறுவன ஊழியரான காளியம்மாள் (வயது 40):

மகளிர் உரிமை தொகை எனக்கு ஆயிரம் ரூபாய் கிடைத்தது பெரும் மகிழ்ச்சி அளிக்கிறது. அடிதட்டு மக்களின் வரவேற்பை பெற்றுள்ளது. தி.மு.க. அரசின் வரலாற்று சிறப்புமிக்க இந்த சாதனை திட்டத்தின் மூலம் எனது குடும்பத்திற்கு பேரு உதவியாக இருக்கும். மாதம் முழுவதும் 6 ஆயிரம் ரூபாய் சம்பளத்திற்கு தான் நான் வேலை செய்கிறேன்.தற்போது ஆயிரம் ரூபாய் மகளிர் உரிமைத்தொகை கிடைத்துள்ளது பெரும் மகிழ்ச்சியாக உள்ளது . என்னை போன்ற ஏழை மக்களுக்கு பெரிய வரப்பிரசாதமாக இந்த திட்டத்தை தமிழக அரசு செயல்படுத்தி உள்ளது. இதனால் ஏழை மக்களின் குடும்பம் வளர்ச்சி பாதையில் செல்லும். இதனை என்றும் மறக்காமல் என்றென்றும் நன்றியுடன் இருப்பேன்.

ஜாகீர் அம்மாபாளையம்

சேலம் ஜாகீர் அம்மாபாளையத்தை சேர்ந்த துப்புரவு ெதாழிலாளி கோகிலா (35):

வறுமையால் வாடி வரும் எனக்கு தற்போது தமிழக அரசின் ஆயிரம் ரூபாய் மகளிர் உரிமை தொகை கிடைத்துள்ளது எல்லையில்லா மகிழ்ச்சியை கொடுத்துள்ளது. என்னை போல எல்லோரும் மகிழ்ச்சியுடன் இருக்க மகளிர் உரிமை தொகை அனைவருக்கும் கிடைக்க வழிவகை செய்ய வேண்டும். இந்த உதவி தொகையால் எனது குடும்பத்திற்கு பேருதவியாக இருக்கும். நான் வாங்கும் குறைந்த சம்பளத்தில் குடும்பத்தில் மிகவும் கஷ்டமான சூழலில் இயக்கி வருகிறேன். எனவே இந்த உரிமைத்தொகை எனக்கு பேரு உதவியாக இருக்கும் என்பதால் என்றும் இந்த அரசுக்கு நன்றி சொல்ல கடமைப்பட்டுள்ளேன்.

கருங்கல்பட்டி

சேலம் கருங்கல்பட்டியைச் சேர்ந்த தறி தொழிலாளி தங்கமணி:

எனது கணவரும் நானும் கைத்தறி நெசவுத்தொழில் செய்து வருகிறோம். இதில் போதிய வருமானம் இல்லாமல் மிகவும் கஷ்டப்பட்டு வருகிறோம். இதனால் குழந்தைகளை கூட சரியாக படிக்க வைக்க முடியவில்லை. தற்போது அரசு மகளிர் உரிமைத்தொகை ஆயிரம் வழங்கியதால் எனக்கு மிகுந்த மகிழ்ச்சி ஏற்பட்டுள்ளது. இந்த திட்டத்தை மனதார வரவேற்கிறேன். வாழ்க்கை தரம் மேம்படும் வகையில் செயல்படுத்தப்பட்டுள்ள இந்த திட்டத்திற்கு பெண்கள் பெரும் வரவேற்பு அளிப்பார்கள்.

கொங்கணாபுரம்

கொங்கணாபுரம் அருகே உள்ள புதுப்பாளையம் கிராமத்தை சேர்ந்த முருகன் மனைவி பூங்கொடி:

நான் டெய்லராக பணிபுரிந்து வருகிறேன். எனது கணவர் சாதாரண கூலி தொழிலாளி, இந்நிலையில் அண்மையில் தமிழக அரசு அறிவித்த குடும்ப தலைவிகளுக்கான உரிமை தொகை எனக்கு கிடைத்துள்ளது. தற்போதுள்ள பொரு ளாதார சூழ்நிலையில் மாதந்தோறும் தமிழக அரசால் எனக்கு வழங்கப்படும் இந்த 1000 ரூபாய் உரிமை தொகை எனக்கு பெரும் உதவியாக அமைந்துள்ளது. பால், உணவு பொருட்கள், உள்ளிட்ட அத்தியாவசிய தேவைகளுக்கும், குழந்தைகளின் கல்வி கட்டணம் செலுத்தவும் பொருளாதார ரீதியாக சிரமத்தில் இருந்து வரும் என் போன்ற குடும்ப தலைவிகளுக்கு, தமிழக அரசின் இந்த உரிமை தொகை நிச்சயம் ஒரு பெரிய உதவியாகவே அமையும்.

குடும்ப தலைவி துர்கா தேவி, (விவசாய கூலி தொழிலாளி):

எங்கள் பகுதியில் விவசாயம் மட்டுமே பிரதான தொழிலாக இருந்து வருகிறது. தற்போது இப்பகுதியில் போதிய மழைப்பொழிவு இல்லாததால் வருமானம் மிகவும் குறைந்து போனது. இந்த நிலையில் தமிழக அரசு அறிவித்துள்ள குடும்ப தலைவிகளுக்கான உரிமை தொகை எனக்கு கிடைத்தது மகிழ்ச்சி அளிக்கிறது. இது போன்ற இக்கட்டான தருணங்களில் மாதந்தோறும் கிடைக்கும் ஆயிரம் ரூபாயை கொண்டு குடும்ப செலவுகளை சமாளிப்பேன்.

ஓமலூர்

கஞ்சநாயக்கன்பட்டி பகுதியை சேர்ந்த அருள்கோபி மனைவி சத்யா (22):

நாங்கள் விவசாய கூலி வேலை செய்து வருகிறோம். எங்களுக்கு 2 ஏக்கர் நிலம் உள்ளது. விவசாயத்தில் நஷ்டம் ஏற்பட்டு கஷ்டப்பட்டு வந்தோம். மகளிர் உரிமை தொகை வழங்குவதாக கூறினார்கள். விண்ணப் பித்திருந்தேன். நேற்று மாலை எனது வங்கி கணக்கில் ஆயிரம் ரூபாய் வந்து உள்ளதாக குறுந்தகவல் வந்தது. இதனால் மிக்க மகிழ்ச்சி அடைந்துள்ளேன். தற்போது வழங்கிய மகளிர் உரிமைத்தொகை மாதம் 1000 ரூபாய் எங்களுக்கு பேர் உதவியாக இருக்கும். எங்கள் குடும்பத்தில் நான் எனது கணவன், 2 குழந்தைகள் உள்ளனர். எங்களுக்கு ஒரு மாதத்திற்கு குடும்ப செலவுக்கு பெரும் உதவியாக இருக்கும் உரிமைத்தொகை வழங்கிய அரசுக்கு நன்றியை தெரிவித்துக் கொள்கிறோம்.

ஓமலூரில் பூ வியாபாரம் செய்யும் சகிலா:

நான் ஓமலூரில் பூக்கடை வைத்து நடத்தி வருகிறேன். எங்கள் குடும்பத்தில் 6 பேர் இருக்கிறோம். நாங்கள் பூக்கடை நடத்தி தான் எங்கள் வாழ்வாதாரத்தை நடத்தி வருகிறோம். எங்கள் குடும்பத்திற்கு போது மான வருமானம் இல்லாததால் கஷ்டப்பட்டு வந்தோம். எங்களுக்கு மகளிர் உரிமை தொகை கிடைத்துள்ளது. இதனால் மிக்க மகிழ்ச்சி அடைகிறோம். தொடர்ந்து எங்கள் குடும்ப செலவுக்கு இது பேரு உதவியாக இருக்கும்.

இவ்வாறு அவர்கள் கூறினர்.

Tags:    

Similar News