உள்ளூர் செய்திகள்

வாழப்பாடியில் காலாவதியான 16 கிலோ இறைச்சி பறிமுதல்

Published On 2023-09-27 09:52 GMT   |   Update On 2023-09-27 09:52 GMT
  • தனியார் உணவகத்தில் ஷவர்மா, கிரில் சிக்கன் உள்ளிட்ட உணவு சாப்பிட்ட சிலர் உடல்நிலை பாதிக்கப்பட்டனர்.
  • இதில் 14 வயது பள்ளி மாணவி ஒருவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

நாமக்கல்:

நாமக்கல் மாவட்டத்தில் தனியார் உணவகத்தில் ஷவர்மா, கிரில் சிக்கன் உள்ளிட்ட உணவு சாப்பிட்ட சிலர் உடல்நிலை பாதிக்கப்பட்டனர். இதில் 14 வயது பள்ளி மாணவி ஒருவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.இதனைத்தொடர்ந்து சேலம் மாவட்டம் வாழப்பாடி, பெத்தநாயக்கன்பாளையம் உள்ளிட்ட பகுதியில் உள்ள 15 உணவகங்களில் நேற்று உணவு பாதுகாப்பு அலுவலர் முத்துசாமி திடீர் சோதனை மேற்கொண்டார். இதில் 5 உணவகங்களில் இருந்து காலாவதியான 16 கிலோ கோழி இறைச்சி, உணவு பொருட்கள் கண்டறியப்பட்டு அழிக்கப்பட்டது. 5 உணவக உரிமையாளர்களுக்கும் தலா ரூ.1,000 அபராதம் விதித்து வசூலிக்கப்பட்டது.

Tags:    

Similar News