உள்ளூர் செய்திகள்

ஏற்காடு பகுதியில் சாலை வசதி இல்லாததால் பெண் கொடுக்க மறுப்பு

Published On 2023-07-03 09:06 GMT   |   Update On 2023-07-03 09:06 GMT
  • ஏற்காடு சுனைப்பாடி, பட்டிபாடி, வேலூர் பகுதியை சேர்ந்த சுமார் 50-க்கும் மேற்பட்ட மக்கள் இன்று மாவட்ட கலெகடர் அலுவலகம் வந்தனர்.
  • கடந்த நூறாண்டு காலமாக சாலை வசதி இல்லாததால் குழந்தைகள் பள்ளிக்கு செல்ல முடியாமலும், மருத்துவ வசதி உள்ளிட்ட அடிப்படை வசதிகள் எதுவும் இல்லாமலும் தவித்து வருகிறோம்.

சேலம்:

சேலம் மாவட்டம் ஏற்காடு சுனைப்பாடி, பட்டிபாடி, வேலூர் பகுதியை சேர்ந்த சுமார் 50-க்கும் மேற்பட்ட மக்கள் இன்று மாவட்ட கலெகடர் அலுவலகம் வந்தனர்.

அவர் கலெக்டர் அலுவலகம் முன்பு முற்றுகையிட முயன்றபோது காவல்துறையினர் அவர்களை தடுத்து நிறுத்தி சமாதான பேச்சுவார்த்தை நடத்தினர்.

இதனைத் தொடர்ந்து புகார் அளிக்க வந்த மகேஸ்வரி கூறும்போது, மலைப்பகுதியான ஏற்காடு சுனைப்பாடி, பட்டிபாடி, வேலூர் பகுதியில் 300-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகிறோம். கடந்த நூறாண்டு காலமாக சாலை வசதி இல்லாததால் குழந்தைகள் பள்ளிக்கு செல்ல முடியாமலும், மருத்துவ வசதி உள்ளிட்ட அடிப்படை வசதிகள் எதுவும் இல்லாமலும் தவித்து வருகிறோம்.

மேலும் கர்ப்பிணி பெண்களை தொட்டிலில் கட்டிக்கொண்டு தூக்கிச் செல்லும் அவல நிலை உள்ளது. இதனால் உயிரி ழப்புகள் ஏற்படுகின்றன. மேலும் எங்கள் ஊருக்கு பெண் கொடுக்க மறுக்கின்ற னர். காரணம் சாலை வசதி இல்லாத பகுதியில் பெண்ணை கொடுக்க விருப்பம் இல்லை என தெரிவிக்கின்றனர்.

இது எங்களுக்கு மிகவும் வேதனை அளிக்கிறது. இது குறித்து பலமுறை அதிகாரி களை சந்தித்து மனு வழங்கி யும் இதுவரை நடவடிக்கை இல்லை. எனவே மாவட்ட நிர்வாகம் இது குறித்து உடனடியாக தலையிட்டு எங்கள் பகுதியில் சாலை வசதி உள்ளிட்ட அடிப்படை வசதிகள் செய்து தர நட வடிக்கை எடுக்க வேண்டும் என தெரிவித்தனர். அப்போது ஏற்காடு தொகுதி எம்.எல்.ஏ சித்ரா உள்பட பலர் உடன் இருந்தனர்.

Tags:    

Similar News