உள்ளூர் செய்திகள்
பாரம்பரிய நெல் ரக விதைகள் பெற விவசாயிகளுக்கு அழைப்பு
- சங்ககிரி வேளாண்மை துறையில் சம்பா பட்ட விதைப்புக்கு தேவையான சீரக சம்பா, தங்க சம்பா, தூய மல்லி உள்ளிட்ட பாரம்பரிய ரக நெல் விதைகள் இருப்பு வைக்கப்பட்டுள்ளன.
- வேளாண்மை விரிவாக்க மையத்தில் இருப்பு வைக்கப்பட்டுள்ளன. இவற்றை அனைத்து விவசாயிகளும் பயன்படுத்திக் கொள்ள வேண்டும். இவ்வாறு அவர் அதில் தெரிவித்துள்ளார்.
சங்ககிரி வட்டார வேளாண்மை உதவி இயக்குனர் விமலா வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது:- சங்ககிரி வேளாண்மை துறையில் சம்பா பட்ட விதைப்புக்கு தேவையான சீரக சம்பா, தங்க சம்பா, தூய மல்லி உள்ளிட்ட பாரம்பரிய ரக நெல் விதைகள் இருப்பு வைக்கப்பட்டுள்ளன. சம்பா பட்ட விதைப்புக்கு ஏடி.டி-45, டி.கே.எம்-13, மேம்படுத்தப்பட்ட வெள்ளை பொன்னி ஆகிய ஆதார நெல் ரக விதைகளும், ஏடிடி-53 சான்று நெல் ரக விதைகளும், சீரக சம்பா, தங்க சம்பா, தூய மல்லி ஆகிய பாரம்பரிய நெல் ரக விதைகளும், விதை நேர்த்தி செய்வதற்கான உயிர் உரங்களான அசோஸ்பைரிலும், பாஸ்போ பாக்டீரியா மற்றும் நெல் நுண்ணூட்டங்களும் மானிய விலையில் சங்ககிரி, தேவூர் வேளாண்மை விரிவாக்க மையத்தில் இருப்பு வைக்கப்பட்டுள்ளன. இவற்றை அனைத்து விவசாயிகளும் பயன்படுத்திக் கொள்ள வேண்டும். இவ்வாறு அவர் அதில் தெரிவித்துள்ளார்.