உள்ளூர் செய்திகள்

 சேலம் அரசு அச்சகத்தில் விண்ணப்பம் பெறப்பட்ட காட்சி.

சேலம் அரசு அச்சகத்தில் விண்ணப்பிக்கும் வசதி

Published On 2023-06-29 10:14 IST   |   Update On 2023-06-29 10:14:00 IST
  • சேலம் அரசு கிளை அச்சகத்தில் அரசிதழில் பொதுமக்கள் பெயர் மாற்றம் செய்ய விண்ணப் பிக்கும் வசதி உள்ளது.
  • ஆங்கிலத்தில் பெயர் மாற்றம் செய்ய ரூ.350 கட்டணம் மற்றும் அஞ்சலக கட்டணம் ரூ.65 என மொத்தம் ரூ.415 செலுத்த வேண்டும்.

சேலம்:

சேலம் அரசு கிளை அச்சக துணை பணி மேலாளர் தனசேகரன் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறியிருப் பதாவது:-

சேலம் அரசு கிளை அச்சகத்தில் அரசிதழில் பொதுமக்கள் பெயர் மாற்றம் செய்ய விண்ணப் பிக்கும் வசதி உள்ளது. ஆங்கிலத்தில் பெயர் மாற்றம் செய்ய ரூ.350 கட்டணம் மற்றும் அஞ்சலக கட்டணம் ரூ.65 என மொத்தம் ரூ.415 செலுத்த வேண்டும். அதேபோல், தமிழில் பெயர் மாற்றம் செய்ய கட்டணம் ரூ.50 மற்றும் அஞ்சலக கட்டணம் ரூ.65 என மொத்தம் ரூ.115-ம் பாரத ஸ்டேட் வங்கி, இந்தியன் ஓவர்சீஸ் வங்கி, பேங்க் ஆப் பரோடா மற்றும் இந்தியன் வங்கி ஆகிய ஏதேனும் ஒரு வங்கியில் இ- செலான் மூலம் செலுத்த வேண்டும். திருநங்கைகளுக்கு விண்ணப்ப கட்டணம் இல்லை.

தமிழ்நாடு அரசிதழில் பெயர் மாற்றம் செய்ய விரும்பும் பொதுமக்கள் பெயர் மாற்றத்திற்கான விண்ணப்பத்துடன் தங்களுடைய பிறப்புச் சான்று நகல், பள்ளி அல்லது கல்லூரி இறுதி சான்று நகல், ஆதார் அட்டை நகல், வாக்காளர் அடையாள அட்டை நகல், குடும்ப அட்டை நகல், நிரந்தர கணக்கு எண் அட்டை நகல், ஓட்டுனர் உரிமம் நகல் மற்றும் கடவுச் சீட்டு நகல் ஆகியவற்றுடன் விண்ணப்பிக்க வேண்டும்.

பெயர் மாற்றம் செய்ய விரும்பும் பொதுமக்கள் www.stationeryprinting.tn.gov.in என்ற இணையதள முகவரியில் விண்ணப் பங்களை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். விண்ணப்பிக்க விரும்பு வோர் அரசு கிளை அச்சகம், சிட்கோ வளாகம், 5 ரோடு, சேலம்-4 என்ற முகவரிக்கு அஞ்சல் வழியாகவோ அல்லது நேரிலோ அணுகி பயன்பெறலாம். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Tags:    

Similar News