உள்ளூர் செய்திகள்

இ- சேவை மைய உரிமையாளர் தொடர்ந்து தலைமறைவு

Published On 2023-06-29 09:31 GMT   |   Update On 2023-06-29 09:31 GMT
  • கல்வி உரிமைச் சட்டத்தின் கீழ் மாணவர் சேர்க்கைக்காக காவேரி புரம், வாஞ்சிநகரை சேர்ந்த காமாட்சி என்பவருக்கு போலியான வருமான சான்றிதழ் தயாரித்து வழங்கி உள்ளார்.
  • இ-சேவை மைய கணினி ஹார்டு டிஸ்க்குகளை வருவாய்த்துறையினர் கைப்பற்றி ஆய்வு மேற்கொண்டனர்.

மேட்டூர்:

சேலம் மாவட்டம் மேட்டூர் அருகே உள்ள ராம மூர்த்தி நகரை சேர்ந்தவர் கோபால். இவருடைய மகன் மோகன்ராஜ் (வயது 33). இவர் மேட்டூர் காமத் பூங்கா எதிரே இ- சேவை மையம் நடத்தி வருகிறார்.

வருவாய்த்துறையினர் ஆய்வு

இவர் கொளத்தூரில் உள்ள பள்ளி ஒன்றில் கட்டாய கல்வி உரிமைச் சட்டத்தின் கீழ் மாணவர் சேர்க்கைக்காக காவேரி புரம், வாஞ்சிநகரை சேர்ந்த காமாட்சி என்பவருக்கு போலியான வருமான சான்றிதழ் தயாரித்து வழங்கி உள்ளார்.

மாணவர் சேர்க்கை ஆய்வின்போது இந்த போலி சான்றிதழ் கண்டு பிடிக்கப்பட்டது. இதனால் காமாட்சியின் குழந்தை, கட்டாய கல்வி உரிமை சட்டத்தின்கீழ் பள்ளியில் சேர்க்க முடியாமல் போனது. இது தொடர்பாக பாதிக்கப்பட்ட காமாட்சி மேட்டூர் தாசில்தாரிடம் புகார் அளித்தார். அதன்பேரில், மோகன்ராஜ் நடத்தி வந்த அழகி இ-சேவை மைய கணினி ஹார்டு டிஸ்க்குகளை வருவாய்த்துறையினர் கைப்பற்றி ஆய்வு மேற்கொண்டனர்.

இந்த ஆய்வில் விருதா சம்பட்டி, சின்னண்ணன் மகன் வேலாயுதம் என்ப வருக்கு வாரிசு சான்றிதழ், கமலேஷ் என்பவருக்கு ஓ.பி.சி. சான்றிதழ்களை அசல் சான்றிதழ் போலவே மோகன்ராஜ் தயாரித்து கொடுத்ததும் கண்டுபிடிக்கப்பட்டது.

4 பிரிவுகளில் வழக்கு

இந்த மோசடி தொடர்பாக நவப்பட்டி குரூப் கிராம நிர்வாக அலு வலர் திருநாவுக்கரசு மேட்டூர் போலீஸ் நிலை யத்தில் புகார் அளித்தார். இதையடுத்து போலீசார் விசாரணை நடத்தி சம்பந்தப்பட்ட இ-சேவை மைய உரிமையாளர் மோகன்ராஜ் மீது மோசடி, ேபாலியாக அரசு ஆவணம் தயாரித்தல், பொதுமக்களை ஏமாற்றி பணம் பெறுதல், அரசுக்கு வருவாய் இழப்பை ஏற்படுத்துதல் உள்ளிட்ட 4 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்தனர்.

தனிப்படை அமைப்பு

இதை அறிந்த மோகன் ராஜ் தலைமறைவாகி விட்டார். அவரை பிடிக்க மேட்டூர் போலீசார் சார்பில் தனிப்படை அமைக்கப்பட் டுள்ளது. ெதாடர்ந்து தனிப்படை போலீசார், தலைமறைவாக உள்ள அவரை தீவிரமாக தேடி வருகின்றனர்.

Tags:    

Similar News