மேட்டூர் ரவுடி கொலையில் 2 பேர் சிக்கினர்
- சேலம் மாவட்டம், மேட்டூர் அருகே உள்ள கருமலைக்கூடல் பகுதியைச் சேர்ந்த கதிர்வேல் மகன் சிபி இவர் மீது கொலை, வழிப்பறி, அடிதடி உள்ளிட்ட வழக்குகள், போலீஸ் நிலையங்களில் நிலுவையில் உள்ளன.
- சேலம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இதுகுறித்து வழக்குபதிவு விசாரணை நடத்தினர்.
சேலம்:
சேலம் மாவட்டம், மேட்டூர் அருகே உள்ள கருமலைக்கூடல் பகுதியைச் சேர்ந்த கதிர்வேல் மகன் சிபி (வயது 25). இவர் மீது கொலை, வழிப்பறி, அடிதடி உள்ளிட்ட வழக்குகள், போலீஸ் நிலையங்களில் நிலுவையில் உள்ளன. மேலும், கருமலைக்கூடல் போலீஸ் நிலைய குற்றப்ப திவேடு பட்டியலிலும் இவரது பெயர் உள்ளது.
ஆள் நடமாட்டம் இல்லாத..
இந்நிலையில் நேற்று இரவு 11 மணியளவில், புதுச்சாம்பள்ளி குரு வாக்காடு அருகே, ஆள் நடமாட்டம் இல்லாத இருட்டான பகுதியில், சிபி வெட்டி கொலை செய்யப்பட்டு கிடந்தார்.
மேட்டூர் பகுதியில் ஒருவர் கொலை செய்யப் பட்டு இருக்கிறார் என முதலில் போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதை யடுத்து போலீசார் சுமார் 1 மணி நேர தேடலுக்கு பிறகு சம்பவ இடத்தை கண்டுபிடித்தனர்.
அங்கு சென்று பார்த்தபோது, பிரபல ரவுடி சிபி, வெட்டி படுகொலை செய்யப்பட்டு ரத்த வெள்ளத்தில் கிடந்தார். இதையடுத்து போலீசார் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக சேலம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இதுகுறித்து வழக்குபதிவு விசாரணை நடத்தினர்.
பழிக்கு பழி
இதில், கடந்தாண்டு ஏப்ரல் மாதம் 7-ந் தேதி, கருமலைக்கூடல் மாரியம்மன் கோவில் திருவிழாவின் போது, ஒருவர் கொலை
செய்யப்பட்டார். அந்த கொலை வழக்கில் சிபிக்கு தொடர்பு உள்ளது. அதனால் பழிக்கு பழி வாங்க, தற்போது அவர் கொலை செய்யப்பட்டு இருக்கலாம் என்று போலீ சார் சந்தேகிக்கின்றனர்.
இந்த நிலையில் கொலை தொடர்பாக 2 பேரை பிடித்து போலீசார் விசா ரணை நடத்தி வருகின்றனர்.