உள்ளூர் செய்திகள்

கணினி சான்றிதழ் தேர்வுக்கு 14-ந்தேதி முதல் விண்ணப்பிக்கலாம்

Published On 2023-06-12 07:33 GMT   |   Update On 2023-06-12 07:33 GMT
  • அரசு கணினி சான்றிதழ் தேர்வு தமிழ்நாடு அரசு தொழில் நுட்பக் கல்வி இயக்ககம் சார்பில் ஆண்டுக்கு 2 தடவை (பிப்ரவரி மற்றும் ஆகஸ்டு) நடத்தப்படுகிறது.
  • 2023-ம் ஆண்டின் ஆகஸ்டு பருவ தேர்வுக்கான அறிவிப்பை தொழில் நுட்பக் கல்வி இயக்ககம் நேற்று வெளியிட்டது.

சேலம்:

அரசு கணினி சான்றிதழ் தேர்வு தமிழ்நாடு அரசு தொழில் நுட்பக் கல்வி இயக்ககம் சார்பில் ஆண்டுக்கு 2 தடவை (பிப்ரவரி மற்றும் ஆகஸ்டு) நடத்தப்படுகிறது. அந்த வகையில் 2023-ம் ஆண்டின் ஆகஸ்டு பருவ தேர்வுக்கான அறிவிப்பை தொழில் நுட்பக் கல்வி இயக்ககம் நேற்று வெளியிட்டது.

அதன்படி, அரசு கணினி சான்றிதழ் தேர்வுக்கு தமிழ்நாடு அரசு தொழில் நுட்பக் கல்வி இயக்கக இணையதளத்தை பயன்படுத்தி வருகிற ஜூன் 14-ந்தேதி முதல் ஆன்லைன் வாயிலாக விண்ணப்பிக்க லாம். இது தொடர்பான கூடுதல் விவரங்களை இணையதளத்தில் விரிவாக அறிந்து ெகாள்ளலாம்.

தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் (டி.என்.பி.எஸ்.சி) நடத்தும் மாவட்ட சுற்றுலா அலுவலர் மற்றும் உதவி சுற்றுலா தேர்வுக்கு அரசு கணினி சான்றிதழ் தேர்வில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டியது அவசியம் என்பது குறிப்பிடத்தக்கது.

இதில் கணினி அறிவியல் பட்டதாரியாக இருந்தால் மட்டுமே கணினி சான்றிதழ் தேர்வு தேர்ச்சியிலிருந்து விலக்கு அளிக்கப்படுகிறது.

Tags:    

Similar News