உள்ளூர் செய்திகள்

கூட்டத்தில் உணவு பாதுகாப்பு துறை நியமன அலுவலர் டாக்டர் கதிரவன் பேசிய காட்சி.

உரிமம், பதிவு சான்று இல்லாமல்இனிப்பு, காரம் விற்றால் ரூ.5 லட்சம் அபராதம்

Published On 2023-11-02 07:55 GMT   |   Update On 2023-11-02 08:24 GMT
  • தீபாவளியை முன்னிட்டு இனிப்பு, காரம் தயாரிப்பாளர்கள், விற்பனையாளர்களுக்கு விழிப்புணர்வு கூட்டம் சேலத்தில் நடந்தது.
  • உணவு பாதுகாப்பு உரிமம், பதிவு சான்று இல்லாமல் இனிப்பு, காரம் தயாரித்து விற்க கூடாது, மீறினால் ரூ.5 லட்சம் அபராதம் விதிக்கப்படும்.

சேலம், நவ.2-

தீபாவளியை முன்னிட்டு இனிப்பு, காரம் தயாரிப்பாளர்கள், விற்பனையாளர்களுக்கு விழிப்புணர்வு கூட்டம் சேலத்தில் நடந்தது . இதில் தயாரிப்பாளர்கள், விற்பனையாளர்கள் 150 பேர் பங்கேற்றனர். இந்த கூட்டத்தில் பங்கேற்ற மாவட்ட உணவு பாதுகாப்பு நியமன அலுவலர் கதிரவன் பேசியதாவது-

ரூ.5 லட்சம் அபராதம்

உணவு பாதுகாப்பு உரிமம், பதிவு சான்று இல்லாமல் இனிப்பு, காரம் தயாரித்து விற்க கூடாது, மீறினால் ரூ.5 லட்சம் அபராதம் விதிக்கப்படும், 6 மாத சிறை தண்டனை விதிக்க சட்டத்தில் இடம் உள்ளது. தயாரிப்பு விற்பனை கூடம் புகை, தூசு, பிற அசுத்தங்கள் இன்றி சுகாதாரமாக அமைந்திருக்க வேண்டும், உணவு தயாரிப்பு பாத்திரங்கள், உபகரணங்கள் சிதிலம டையாமலும், சுத்த மாக கழுவி உலர்த்த வேண்டும், உணவு மூலப்பொருட்களை தரையில் பரப்பி வைக்க கூடாது,

பலகையின் மீது மூடி வைத்திருப்பது கட்டாயம், பொட்டல மிட்ட தரமான எண்ணை, நெய் பயன்ப டுத்துவதோடு அதனை திரும்ப திரும்ப பயன்படுத்த கூடாது, கிப்ட் பாக்ஸ் மீது லேபிள் விதிமுறையை பின்பற்ற வேண்டும், ஸ்டிக்கர், துண்டு சீட்டு ஒட்ட கூடாது, உணவு பொருட்களை கையாளும் அனைவரும் மருத்துவ சான்று பெற்றிருக்க வேண்டும், எந்த காரணத்தை கொண்டும் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக், அச்சிடப்பட்ட தாட்களை பயன்படுத்த கூடாது.

சட்ட நடவடிக்கை

குறிப்பாக ஒவ்வொரு இனிப்பு , காரம் மீதும் அதன் 14 விவரங்கள் அடங்கிய சீட்டு இடம்பெற வேண்டும், உணவு பாதுகாப்பு அலுவலர்கள் ஆய்வு நடத்தி குறைகள், தவறுகள் கண்டறிந்தால் சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.இவ்வாறு அவர் கூறினார். 

Tags:    

Similar News