உள்ளூர் செய்திகள்
வாழப்பாடியில் சாலையோர மைல் கல்லுக்கு ஆயுத பூஜை வழிபாடு நடத்திய சாலைப் பணியாளர்கள்.
வாழப்பாடியில் வினோதம் சாலையோர மைல் கல்லுக்கு ஆயுத பூஜை வழிபாடு
- நெடுஞ்சாலைத்துறை சாலை பணியாளர்கள் ஆயுத பூஜையை முன்னிட்டு, சாலையோரத்தில் வைக்கப்பட்டுள்ள மைல் கல்லுக்கு பூ மாலை அணிவித்து தீபமேற்றி வினோத வழிபாடு நடத்தினர்.
- பொதுமக்களை வியப்பில் ஆழ்த்தியதோடு சமூக ஊடகங்களில் பரவி பேசு பொருளாகவும் மாறியது.
வாழப்பாடி:
சேலம் மாவட்டம் வாழப்பாடியில் நெடுஞ்சாலைத்துறை சாலை பணியாளர்கள் ஆயுத பூஜையை முன்னிட்டு, சாலையோரத்தில் வைக்கப்பட்டுள்ள மைல் கல்லுக்கு பூ மாலை அணிவித்து வாழைமரம், மாவிலைத் தோரணங்கள் கட்டி, மஞ்சள், சந்தனம், குங்குமமும், தேங்காய், வாழைப்பழம் வெற்றிலைத் தாம்பூலமும் வைத்து, ஊதுபத்தி, கற்பூர தீபமேற்றி வினோத வழிபாடு நடத்தினர். இன்று முதல் 3 நாட்களுக்கு விடுமுறை என்பதால் சாலைப் பணியாளர்கள் நேற்றே மைல் கல்லுக்கு வாழைமரம், தோரணம் கட்டி, மாலை அணிவித்து நடத்திய ஆயுத பூஜை வழிபாடு, பயணிகள் மற்றும் பொதுமக்களை வியப்பில் ஆழ்த்தியதோடு சமூக ஊடகங்களில் பரவி பேசு பொருளாகவும் மாறியது.