உள்ளூர் செய்திகள்

நடைபயிற்சி நிகழ்ச்சியில் கலெக்டர் கார்மேகம், மாநகராட்சி மேயர் ராமசந்திரன், பார்த்திபன் எம்.பி., வடக்கு ராஜேந்திரன் எம்.எல்.ஏ., மேட்டூர் சதாசிவம் எம்.எல்.ஏ., மாநகராட்சி கமிஷனர் பாலச்சந்தர் உள்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

சேலத்தில் "நடப்போம் நலம் பெறுவோம்" நடைபயிற்சி தொடக்கம்

Published On 2023-11-04 15:02 IST   |   Update On 2023-11-04 15:02:00 IST
  • நடைபயிற்சியை ஊக்குவிக்கவும் மாவட்டம்தோறும் "நடப்போம் நலம் பெறுவோம்" என்ற திட்டத்தை செயல்படுத்திட உத்தரவிட்டு உள்ளார்.
  • இந்த பாதையில் தடையின்றி நடைபயிற்சி மேற்கொள்ள ஏதுவாக சாலையானது புனரமைப்பு செய்யப்பட்டுள்ளது.

சேலம்:

தமிழ்நாடு முதல்-அமைச்சர் பொதுமக்களின் உடல் ஆரோக்கியத்தை காக்கவும், நடைபயிற்சியை ஊக்குவிக்கவும் மாவட்டம்தோறும் "நடப்போம் நலம் பெறுவோம்" என்ற திட்டத்தை செயல்படுத்திட உத்தரவிட்டு உள்ளார். அதன்படி சேலம் மாவட்டத்தில் இத்திட்டத்தினை செயல்படுத்தும் விதமாக சேலம், அஸ்தம்பட்டி ரவுண்டானாவில் தொடங்கி மாடர்ன் தியேட்டர் வளைவு வரை சென்று மீண்டும் அஸ்தம்பட்டி ரவுண்டானா முடிய 8 கிலோ மீட்டர் தூரம் கொண்ட சுகாதார நடைபயிற்சியில் மாவட்ட கலெக்டர் கார்மேகம், மாநகராட்சி மேயர் ராமச்சந்திரன், பார்த்திபன் எம்.பி., வடக்கு ராஜேந்திரன் எம்.எல்.ஏ., மேட்டூர் சதாசிவம் எம்.எல்.ஏ., மாநகராட்சி கமிஷனர் பாலச்சந்தர் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

இந்த பாதையில் தடையின்றி நடைபயிற்சி மேற்கொள்ள ஏதுவாக சாலையானது புனரமைப்பு செய்யப்பட்டுள்ளது. மேலும் நடைபயிற்சி மேற்கொள்ளும் பாதையின் இருபுறமும் நடைபயிற்சியின் பயன்கள் மற்றும் தொற்றா நோய் குறித்த விழிப்புணர்வு பதாகைகள், நடைபயண தூரம் குறித்த தகவல் பலகைகள் வைக்கப்பட்டுள்ளது. குறிப்பிட்ட இடைவெளிகளில் இளைப்பார அமரும் வகையில் 8 இடங்களில் இருக்கைகள் அமைக்கப்பட்டு உள்ளது.

இந்நிகழ்ச்சியில் உதவி கலெக்டர் (பயிற்சி) சுவாதிஸ்ரீ, துணை இயக்குநர் சுகாதார பணிகள் சவுண்டம்மாள்(சேலம்), யோகானயத்(ஆத்தூர்), துணை இயக்குநர் வளர்மதி, துணை இயக்குநர் கணபதி, மாவட்ட சித்த மருத்துவ அலுவலர் ராமச்சந்திரன், அஸ்தம்பட்டி மண்டல தலைவர் உமாராணி வெள்ளி கொலுசு கைவினைஞர்கள் சங்க தலைவர் ஆனந்த ராஜ் மற்றும் அரசு அலுவலர்கள், நடைபயண சங்கத்தை சார்ந்தவர்கள், சமூகஆர்வலர்கள், பொதுமக்கள், கல்லூரி மாணவ, மாணவிகள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News