உள்ளூர் செய்திகள்

பெட்ரோல் ஊற்றி முதியவர் தீக்குளிக்க முயற்சி

Published On 2023-11-27 09:42 GMT   |   Update On 2023-11-27 09:42 GMT
  • நாராயணன் (வயது 77). இவர் இன்று மாவட்ட கலெக்டர் அலுவலகத்திற்கு வந்தார்.
  • நுழைவு வாயிலில் வைத்து திடீரென பெட்ரோலை எடுத்து தலையில்ஊற்றி தீக்குளிக்க முயன்றார்.

சேலம்:

சேலம் மாவட்டம் ஓமலூர் பல்பாக்கி பகுதியை சேர்ந்தவர் நாராயணன் (வயது 77). இவர் இன்று மாவட்ட கலெக்டர் அலுவலகத்திற்கு வந்தார். நுழைவு வாயிலில் வைத்து திடீரென பெட்ரோலை எடுத்து தலையில்ஊற்றி தீக்குளிக்க முயன்றார். அப்போது பாதுகாப்பு பணியில் இருந்த போலீசார் அதிர்ச்சி அடைந்து அவரை தடுத்து தண்ணீரை ஊற்றி சமாதானப்படுத்தினர்.

இதுகுறித்து தீக்குளிக்க முயன்ற முதியவர் நாராயணன் கூறியதாவது:-

எனக்கு முனியப்பன் மற்றும் அமிர் தலிங்கம் ஆகிய 2 மகன்கள் உள்ளனர். மூத்த மகன் முனியப்பன் சேலம் புதிய பஸ் நிலையம் அருகே ஹார்டுவேர்ஸ் கடை நடத்தி வருகிறார்.

இந்த நிலையில் எனக்கு சொந்தமான 1.38 ஏக்கர் நிலத்தை அபகரித்துக் கொண்டார். இது குறித்து எனது மகனிடம் கேட்டபோது என்னை திட்டி வெளியேற்றுகிறார். வயதான நான் எங்கு செல்வது என தெரியாமல் தவித்து வந்தேன். இதனால் வீட்டில் விஷத்தை குடித்து தற்கொலை செய்து கொள்வதை விட அனாதையாக இருக்கும் எனக்கு கலெக்டர் அலுவலகத்தில் தீக்குளித்து இறந்து விடலாம் என நினைத்து தீக்குளிக்க முயற்சி செய்தேன். மாவட்ட நிர்வாகம் என் மகன் மீது நடவடிக்கை எடுத்து வாழ வழிவகை செய்ய வேண்டும்

இவ்வாறு அவர் கூறினார்.

இதனைத் தொடர்ந்து முதியவரை டவுன் போலீசார் போலீஸ் நிலையத்திற்கு அழைத்துச் சென்று போலீசார் தொடர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Tags:    

Similar News