மோட்டார் சைக்கிள் மீது டிராக்டர் மோதி வாலிபர் சாவு
- ஹரி பிரசாத் (22). இவர் இன்று காலை 9 மணி அளவில் செவ்வாய்பேட்டை பஜார் வீதி தேர்நிலையம் அருகே மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தார்.
- ஹரிபிரசாத் பிரேக் போட்டபோது, எதிர் திசையில் வந்து கொண்டிருந்த டிராக்டர் மோட்டார் சைக்கிள் மீது மோதியது.
சேலம்:
சேலம் செவ்வாய்பேட்டை மாதேஸ்வரன் தெரு பகுதியை சேர்ந்தவர் தங்கதுரை.இவரது மகன் ஹரி பிரசாத் (22). இவர் இன்று காலை 9 மணி அளவில் செவ்வாய்பேட்டை பஜார் வீதி தேர்நிலையம் அருகே மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தார்.
டிராக்டர் மோதியது
எதிர் திசையில் ஒரு டிராக்டர் வந்து கொண்டிருந்தது. அப்போது திடீரென ஒரு நபர் சாலையின் குறுக்கே வந்துள்ளார்.
அவர் மீது மோதாமல் இருக்க ஹரிபிரசாத் பிரேக் போட்டபோது, எதிர் திசையில் வந்து கொண்டிருந்த டிராக்டர் மோட்டார் சைக்கிள் மீது மோதியது.
இதில் தடுமாறி விழுந்த ஹரிபிரசாத் தலையில் பலத்த காயம் அடைந்தார். இதைக் கண்ட அந்த பகுதி மக்கள் உடனடியாக ஹரி பிரசாத்தை மீட்டு சேலம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.
ஆனால் செல்லும் வழியிலேயே ஹரி பிரசாத் பரிதாபமாக உயிரிழந்தார். இது குறித்து செவ்வாய்பேட்டை போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.