உள்ளூர் செய்திகள்

பூலாம்பட்டி காவிரி ஆற்றில் விசைப்படகில் சுற்றுலா பயணிகள் உற்சாக சவாரி

Published On 2023-07-17 13:01 IST   |   Update On 2023-07-17 13:01:00 IST
  • டெல்டா பாசனத்திற்கு 10 ஆயிரம் கனஅடி தண்ணீர் திறந்து விடப்படுகிறது.
  • பூலாம்பட்டி நெரிஞ்சிப்பேட்டை இடையேயான விசைப்படகு போக்குவரத்து நடந்து வருகிறது.

எடப்பாடி:

மேட்டூர் அணையில் இருந்து டெல்டா பாசனத்திற்கு 10 ஆயிரம் கனஅடி தண்ணீர் திறந்து விடப்படுகிறது.

இதனால், செக்கானூர், பூலாம்பட்டி, நெரிஞ்சிப் பேட்டை கோனேரிப்பட்டி, ஊராட்சிகோட்டை ஆகிய நீர் மின் கதவணை வழியாக தண்ணீர் பெருக்கெடுத்து செல்வதால், மின்சார உற்பத்தி நடைபெறுகிறது.

பூலாம்பட்டி நெரிஞ்சிப்பேட்டை இடையேயான விசைப்படகு போக்குவரத்து நடந்து வருகிறது. நேற்று விடுமுறை தினம் என்பதால் சேலம், நாமக்கல், ஈரோடு மற்றும் பல்வேறு பகுதியில் இருந்து சுற்றுலா பயணிகள் குடும் பம் குடும்பமாக வந்திருந்து விசைப்படகில் உற்சாக சவாரி செய்து மகிழ்ந்தனர்.

மேலும், இங்குள்ள நீர்மின் தகவணை பாலம், பஸ் நிலையம், கைலாசநாதர் கோவில் பஸ் நிலையத்தில் உள்ள பூங்கா, மூலப்பாதை பெருமாள் கோவில், மாட்டுக்கார பெருமாள் கோவில் உள்ளிட்ட பகுதி களில் சுற்றுலா பயணிகள் செல்பி எடுத்து மகிழ்ந்தனர்.

Tags:    

Similar News