உள்ளூர் செய்திகள்

எஸ்.எஸ்.எல்.சி. பொதுத்தேர்வு: மறு கூட்டல் முடிவுகள் இன்று வெளியீடு

Published On 2023-06-22 09:24 GMT   |   Update On 2023-06-22 09:24 GMT
  • சேலம் மாவட்டத்தை பொறுத்தவரையில் 179 தேர்வு மையங்களில் இந்த தேர்வு நடைபெற்றது.
  • இதையடுத்து கடந்த மே மாதம் 19-ந்தேதி தேர்வு முடிவு வெளியிடப்பட்டது.

சேலம்:

தமிழகம் முழுவதும் 2022-2023 கல்வியாண்டுக்கான எஸ்.எஸ்.எல்.சி. பொதுத்தேர்வு கடந்த மாதம் 4-ந் தேதி தொடங்கி 20-ந் தேதி முடிவடைந்தது.

சேலம்

சேலம் மாவட்டத்தை பொறுத்தவரையில் 179 தேர்வு மையங்களில் இந்த தேர்வு நடைபெற்றது. அரசு பள்ளி, மாநகராட்சி பள்ளி, அரசு உதவி பெறும் பள்ளி, உண்டு உறைவிட பள்ளி, தனியார் பள்ளிகள் என மொத்தம் 537 பள்ளிகளை சேர்ந்த 21 ஆயிரத்து 835 மாணவர்களும், 21 ஆயிரத்து 593 மாணவிகளும் என மொத்தம் 43ஆயிரத்து 428 பேர் எஸ்.எஸ்.எல்.சி பொதுத்தேர்வை எழுதினர்.

இதையடுத்து கடந்த மே மாதம் 19-ந்தேதி தேர்வு முடிவு வெளியிடப்பட்டது. இதில் 19 ஆயிரத்து 168 மாணவர்களும், 20 ஆயிரத்து 410 மாணவிகளும் என மொத்தம் 39 ஆயிரத்து 578 பேர் தேர்ச்சி பெற்றனர். மாவட்டத்தில் 3,850 பேர் தேர்ச்சி பெறவில்லை.

நாமக்கல்

இதேபோல் நாமக்கல் மாவட்டத்தில் 10-ம் வகுப்பு பொதுத்தேர்வில் 300 பள்ளிகளை சேர்ந்த 10 ஆயிரத்து 121 மாணவர்களும், 9 ஆயிரத்து 392 மாணவிகளும் என மொத்தம் 19 ஆயிரத்து 513 பேர் தேர்வை எழுதி இருந்தனர். இவர்களின் 9 ஆயிரத்து 170 மாணவர்களும், 8 ஆயிரத்து 973 மாணவிகளும் என மொத்தம் 18 ஆயிரத்து 143 பேர் தேர்ச்சி பெற்று உள்ளனர்.

மறுகூட்டல்

இந்த நிலையில் 10- வகுப்பு தேர்வு எழுதிய மாணவ- மாணவிகள் சிலர் மறுகூட்டல் ேகாரி கடந்த சில வாரங்களுக்கு முன்பு விண்ணப்பித்தனர். இதையடுத்து அவர்களுடைய விடைத்தாள் மீண்டும் மறுகூட்டல் செய்யப்பட்டது.

மறுகூட்டலுக்கு விண்ணப்பித்தவர்களில் மதிப்பெண் மாற்றம் உள்ள தேர்வர்களது பதிவெண்கள் பட்டியல் அரசு தேர்வுகள் இயக்ககம் இன்று பிற்பகல் வெளியிடப்படுகிறது. அரசு தேர்வுகள் இயக்ககம் இணையதளத்தில் மறுகூட்டல் முடிவுகளை தெரிந்து கொள்ளலாம்.

மதிப்பெண் சான்றிதழ்

மதிப்பெண்களில் மாற்றம் உள்ள தேர்வர்களுக்கான தற்காலிக மதிப்பெண் சான்றிதழ்களை, மதிப்பெண் மாற்றங்களுடன் அரசு தேர்வுகள் இயக்ககம் இணையதளத்தில் இருந்து பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.

மதிப்பெண் மறுகூட்டலுக்கு விண்ணப்பித்து பட்டியலில் இடம் பெறாத பதிவெண்களுக்கான விடைத்தாள்களில் மதிப்பெண்களில் எவ்வித மாற்றமும் இல்லை என கல்வி அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

Tags:    

Similar News