உள்ளூர் செய்திகள்

சேலம் மேற்கு தாசில்தார் அலுவலகத்தில்பொதுமக்களுக்கு பட்டா வழங்க வசதி

Published On 2023-11-02 15:01 IST   |   Update On 2023-11-02 15:01:00 IST
  • அரசால் நகர நிலவரித்திட்ட தனி தாசில்தாரால் பொது மக்களுக்கு பட்டா வழங்கும் பணி மேற்கொள்ள ஆணை பிறப்பிக்கப்பட்டுள்ளது.
  • பதிவுப்பத்திர ஆவணங்களை கொண்டு மனு செய்து நகர நிலவரித்திட்ட தனி தாசில்தார் வழியாக பட்டா பெற்றுக் கொள்ளலாம்.

சேலம்:

சேலம் மாவட்ட கலெக்டர் கார்மேகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

சேலம் மாநகராட்சியில் 35 வார்டுகள் மற்றும் 1301 பிளாக்குகளுக்கு நகர நில அளவை வருவாய் பின் தொடர் பணிகள் மேற்கொள்ள திட்டமிடப்பட்டு அரசால் நகர நிலவரித்திட்ட தனி தாசில்தாரால் பொது மக்களுக்கு பட்டா வழங்கும் பணி மேற்கொள்ள ஆணை பிறப்பிக்கப்பட்டுள்ளது.

மேற்கு தாசில்தார் அலுவலகம்

இதன் பொருட்டு சேலம் நகர நிலவரித்திட்ட தனி தாசில்தார் அலுவலகம் ஏற்படுத்தப்பட்டு இது சேலம் மேற்கு தாசில்தார் அலுவலக முதல் தளத்தில் செயல்பட்டு வருகிறது.

சேலம் மாநகராட்சியில் நகர நிலவரித்திட்டத்தின் கீழ் பட்டாதாரர்கள் இணையதளம் வழியாக தங்களிடம் உள்ள பதிவுப்பத்திர ஆவணங்களை கொண்டு மனு செய்து நகர நிலவரித்திட்ட தனி தாசில்தார் வழியாக பட்டா பெற்றுக் கொள்ளலாம்.

எனவே சேலம் மாநகராட்சிக்கு உட்பட்ட சேலம், சேலம் மேற்கு மற்றும் சேலம் தெற்கு வட்டங்களை சார்ந்த நில உரிமையாளர்கள் இதன் வாயிலாக பட்டாக்கள் பெற்று பயனடைய கேட்டுக்கொள்ளப் படுகிறது.

இவ்வாறு அவர் அதில் கூறியுள்ளார்.

Tags:    

Similar News