சேலத்தில் தியேட்டர் முன்பு வைக்கப்பட்டிருந்த விஜய் கட்-அவுட்டிற்கு ரசிகர்கள் மலர் தூவி மகிழ்ச்சியை வெளிப்படுத்திய காட்சி.
நாமக்கல்லில் உள்ள தியேட்டரில் நடிகர் விஜய் நடித்த லியோ திரைப்படத்தை காண வந்திருந்த ரசிகர்கள்.
சேலத்தில் உள்ள தியேட்டர் முன்பு விஜய் நடித்த லியோ திரைப்படத்தை காண குவிந்திருந்த ரசிகர்கள்.
சேலம், நாமக்கல்லில்லியோ படம் 80 தியேட்டர்களில் ரிலீஸ்
- சேலம் மாவட்டத்தில் 80 தியேட்டர்களில் இத்திரைபடம் இன்று வெளியானது.
- சேலம் மாநகரத்தில் 10-க்கும் மேற்பட்ட தியேட்டரில் வெளியானது. இதையொட்டி காலை முதலே ரசிகர்கள் தியேட்டர்களில் குவியத் தொடங்கினர்.
சேலம்:
நடிகர் விஜய் நடித்த லியோ திரைப்படம் தமிழகம் முழுவதும் இன்று வெளியானது. சேலம் மாவட்டத்தில் 80 தியேட்டர்களில் இத்திரைபடம் இன்று வெளியானது.
சேலம் மாநகரத்தில் 10-க்கும் மேற்பட்ட தியேட்டரில் வெளியானது. இதையொட்டி காலை முதலே ரசிகர்கள் தியேட்டர்களில் குவியத் தொடங்கினர்.
பட்டாசு வெடித்து கொண்டாட்டம்
அவர்கள் தியேட்டர்கள் முன்பு பட்டாசு வெடித்தும், இனிப்புகள் வழங்கியும் தங்கள் மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர்.
சேலம் 5 தியேட்டர் முன்பு படம் வெளியாவதையொட்டி விஜய் மக்கம் இயக்கம் மாவட்ட தலைவர் தமிழன் பார்த்திபன் தலைமையில் ரசிகர்கள் பட்டாசு வெடித்து உற்சாகமாக கொண்டாடினர்.
அனைத்து தியேட்டர்களிலும் முதல் காட்சி 9 மணிக்கு திரையிடப்பட்டது. முதல் காட்சி தொடங்கியதும் தியேட்டரில் காத்திருந்த ரசிகர்கள் விசில் அடித்து மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர். மேலும் தியேட்டருக்குள் ரசிகர்கள் எழுப்பிய கரகோஷம் விண்ணை பிளந்தது. விஜய் வரும் ஒவ்வொரு சீனிலும் ரசிகர்கள் தங்கள் உற்சாகத்தை வெளிப்படுத்தினர்.
இதேபோல் சேலம் மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில் இன்று லியோ திரைப்படம் வெளியாகி ரசிகர்களை உற்சாகத்தில் ஆழ்த்தியுள்ளது. நீண்ட நாள்களுக்குப் பிறகு விஜய் படம் வெளியான மகிழ்ச்சியில் ரசிகர்கள் ஆங்காங்கே தங்களது மகிழ்ச்சியை பகிரும் வகையில் கேக் வெட்டியும் கொண்டாடி வருகின்றனர்.
நாமக்கல்
நாமக்கல் நகரில் 6 தியேட்டர்களில் லியோ படம் திரையிடப்பட்டது. படத்தை காண ஏராளமான இளைஞர்களும், அவர்களுடன் பெண்களும் தியேட்டரில் குவிந்தனர். முதல் காட்சி 9 மணிக்கு திரையிடப்பட்டது.
12 மணிக்கு காட்சிக்கு டிக்கெட் எடுத்திருந்த ரசிகர்களும் காலையிலேயே குவிந்ததால் தியேட்டர்களில் திருவிழா போல் காட்சியளித்தது. அசம்பாவிதங்களை தடுக்க போலீஸ் பாதுகாப்பும் போடப்பட்டு இருந்தது.
இதேபோல் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் உள்ள தியேட்டர்களில் படம் வெளியானதை தொடர்ந்து ரசிகர்கள் உற்சாகம் அடைந்து உள்ளனர்.சேலம், நாமக்கல்லில்
லியோ படம் 80 தியேட்டர்களில் ரிலீஸ்