உள்ளூர் செய்திகள்

தர்ணா போராட்டத்தில் ஈடுப்பட்ட கைதி பிரபு

சேலம் கோர்ட்டு வளாகத்தில் கைதி 'திடீர்' தர்ணா

Published On 2023-08-02 15:18 IST   |   Update On 2023-08-02 15:18:00 IST
  • பிரபு (40). இவர் கடந்த 2013-ம் ஆண்டு கரூரில் நடந்த ஒரு கொலை வழக்கில் ஆயுள் தண்டனை பெற்று தற்போது சேலம் மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.
  • இதற்கிடையே கடந்த 2019-ம் ஆண்டு வீராணத்தில் நடந்த கொலை வழக்கில் விசாரணை கைதியாகவும் சிறையில் உள்ளார்.

சேலம்:

கரூர் மாவட்டம் தவிட்டுப்பாளையம் பகுதியை சேர்ந்தவர் பிரபு என்ற மாங்காய் பிரபு (40). இவர் கடந்த 2013-ம் ஆண்டு கரூரில் நடந்த ஒரு கொலை வழக்கில் ஆயுள் தண்டனை பெற்று தற்போது சேலம் மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.

கொலை வழக்கு

இதற்கிடையே கடந்த 2019-ம் ஆண்டு வீராணத்தில் நடந்த கொலை வழக்கில் விசாரணை கைதியாகவும் சிறையில் உள்ளார். இது தவிர மேலும் ஒரு கொலை வழக்கும் அவர் மீது உள்ளது.

இந்த நிலையில் இன்று வீராணம் கொலை வழக்கு தொடர்பாக சேலம் கோர்ட்டுக்கு போலீசார் அவரை அழைத்து வந்தனர். அப்போது கோர்ட்டு வளாகத்தில் அமர்ந்து திடீரென தர்ணாவில் ஈடுபட்டார்.

தொடர்ந்து அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-

சேலம் மத்திய சிறையில் கடந்த 2 நாட்களுக்கு முன்பு பாட்டிலில் பழங்களை ஊற வைத்தது கண்டுபிடிக்கப்பட்டது. இது தொடர்பாக விசாரணை நடத்திய அதிகாரிகள் நேற்று என்னை நிர்வாணமாக்கி தாக்கினர். மேலும் அந்த ஊறலை நான் வைத்ததாக ஏற்றுக்கொள்ளும்படி வற்புறுத்தினர்.

நான் அதற்கு மறுத்ததால் சிறை சூப்பிரண்டு உட்பட அதிகாரிகள் என்னை கண்மூடித்தனமாக தாக்கினர். இதனால் எனது உயிருக்கு பாதுகாப்பு இல்லாத நிலை உள்ளது. எனக்கு பாதுகாப்பு வழங்க வேண்டும், சிறையில் நடக்கும் அனைத்து குற்றச்சம்பவங்களுக்கும் அதிகாரிகள் தான் உடந்தையாக உள்ளனர்.

இவ்வாறு அவர் கண்ணீர் விட்டு கதறினார்.

இதனால் பரபரப்பு நிலவியது.

Tags:    

Similar News