உள்ளூர் செய்திகள்

கலெக்டர் அலுவலகம் முன்பு மறியல் செய்த திராவிட தமிழர் கட்சியினர்.

போலீஸ் தாக்குதலுக்கு எதிர்ப்பு சேலம் கலெக்டர் அலுவலகம் முன்பு சாலை மறியல்

Published On 2023-10-03 09:32 GMT   |   Update On 2023-10-03 09:32 GMT
  • திராவிட தமிழர் கட்சி பொதுச்செயலாளர் நெல்லை கதிரவன் மற்றும் செயலாளர் சங்கர் உள்ளிட்ட பொதுமக்கள் மீது போலீசார் லேசாக தடியடி நடத்தினர்.
  • சேலம் மாவட்ட கலெக்டர் அலுவலகம் அருகே திடீரென அமர்ந்து மறியலில் ஈடுபட்டனர். அப்போது காவல்துறையை கண்டித்து பல்வேறு கோஷங்களை எழுப்பினர்.

சேலம்:

நாகர்கோவில் கிருஷ்ணன் வீதியில் 5 பட்டா கேட்டு போராட்டம் நடத்திய திராவிட தமிழர் கட்சி பொதுச்செயலாளர் நெல்லை கதிரவன் மற்றும் செயலாளர் சங்கர் உள்ளிட்ட பொதுமக்கள் மீது போலீசார் லேசாக தடியடி நடத்தினர். மேலும் சிலர் கைது செய்யப்பட்டனர்.

இதற்கு எதிர்ப்பு தெரிவித்து சேலம் மாவட்ட திராவிட தமிழர் கட்சியின் மாவட்ட தலைவர் இளங்கோவன் தலைமையில் மாநில அமைப்பு செயலாளர் செல்வ முருகேசன் உள்ளிட்ட சிலர் சேலம் மாவட்ட கலெக்டர் அலுவலகம் அருகே திடீரென அமர்ந்து மறியலில் ஈடுபட்டனர். அப்போது காவல்துறையை கண்டித்து பல்வேறு கோஷங்களை எழுப்பினர்.

இதையடுத்து கலெக்டர் அலுவலகம் அருகே பாதுகாப்பு பணியில் இருந்த போலீசார் மறியலில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். உரிய விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதி அளித்ததன் பேரில் மறியலை கைவிட்டு அவர்கள் கலைந்து சென்றனர்.

இதனால் கலெக்டர் அலுவலக பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு நிலவியது.

இது குறித்து திராவிட தமிழர் கட்சியின் மாநில பொதுச் செயலாளர் கூறும்போது, அருந்ததியர் மக்களுக்கு பட்டா கேட்டு அமைதியான முறையில் போராட்டம் நடத்திய பொதுச்செயலாளர் உள்ளிட்ட 9 பேரை காவல்துறையினர் கண்மூடித்தனமாக தாக்குதல் நடத்தி கைது செய்தது வன்மையாக கண்டிக்கத்தக்கது.

அவர்களை உடனே விடுதலை செய்ய வேண்டும். தாக்குதல் நடத்திய நாகர்கோவில் டி.எஸ்.பி. மற்றும் காவல்துறையினர் மீது வன்கொடுமை சட்டத்தில் வழக்கு பதிவு செய்ய வேண்டும் என தெரிவித்தனர்.

Tags:    

Similar News