உள்ளூர் செய்திகள்

இறந்த மூர்ததி

தொழிலாளி சுட்டு கொல்லப்பட்டதாக புகார்:சேலம் டி.எஸ்.பி விசாரணை தீவிரம்

Published On 2023-06-26 13:17 IST   |   Update On 2023-06-26 13:17:00 IST
  • மூர்த்தி (வயது 38). கூலி வேலைக்கும், எஸ்டேட் வேலைக்கும் சென்று வந்தார். இது தவிர ஆடு மேய்க்கவும் அவ்வப்போது சென்று வருவார்.
  • கடந்த 4 மாதத்திற்கு முன்பு, மூர்த்தி ஏற்காடு அருகே சமுத்திரகாடு என்ற வனப்பகுதியில் மர்மமாக இறந்து கிடந்தார்.

ஏற்காடு:

சேலம் மாவட்டம் ஏற்காடு அருகே உள்ள காக்கம்பாடி மலை கிராமத்தை சேர்ந்தவர் மூர்த்தி (வயது 38). கூலி வேலைக்கும், எஸ்டேட் வேலைக்கும் சென்று வந்தார். இது தவிர ஆடு மேய்க்கவும் அவ்வப்போது சென்று வருவார்.

கடந்த 4 மாதத்திற்கு முன்பு, மூர்த்தி ஏற்காடு அருகே சமுத்திரகாடு என்ற வனப்பகுதியில் மர்மமாக இறந்து கிடந்தார். உடலை கைப்பற்றிய ஏற்காடு போலீசார், உடற்கூறு ஆய்வு செய்து உறவினர்களிடம் ஒப்படைத்தனர்.

இந்த நிலையில் மூர்த்தியின் மனைவி மணி மேகலை மற்றும் உறவினர் கள் மூர்த்தியின் சாவில் மர்மம் உள்ளதாகவும், துப்பாக்கி குண்டு பாய்ந்து தான் மூர்த்தி இறந்துள்ளார் என தெரிவித்தனர்.

மேலும், மூர்த்தியை 8 பேர் கொண்ட கும்பல் சுட்டு கொன்று விட்ட தாகவும், சம்பவம் குறித்து உரிய விசாரணை செய்ய வேண்டும் எனவும் கூறி மூர்த்தியின் மனைவி மணி மேகலை சேலம் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சிவகுமாரிடம் மனு கொடுத்தார்.

இதனையடுத்து தற்போது மூர்த்தி சாவு குறித்து விசாரிக்க சேலம் ரூரல் டி.எஸ்.பி அமல அட்

வினுக்கு உத்தரவிடப்பட்டு உள்ளது. இதையடுத்து அவர் சேலத்தில் உள்ள டி.எஸ்.பி அலுவலகத்தில், டி.எஸ்.பி அமல அட்வின் மூர்த்தியின் மனைவி மணிமேகலை, அவரது உறவினர்கள் மற்றும் புகாரில் தெரிவிக்கப் பட்டுள்ள 8 பேரிடமும் விசாரணையை தொடங்கினார்.

மேலும் மூர்த்தி இறந்து கிடந்த இடத்தையும் அவர் பார்வையிட்டார். இது தொடர்பாக ஏற்காடு போலீசாரிடமும் அவர் விவரங்கள் கேட்டறிந்தார். விசாரணைக்கு பின்னர் அவர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சிவகுமாரிடம் அறிக்கை சமர்ப்பிக்க உள்ளார். அதன்பிறகே மூர்த்தி சாவு குறித்த உண்மை விவரங்கள் தெரியவரும் என்று போலீசார் தெரிவித்தனர்.

Tags:    

Similar News