உள்ளூர் செய்திகள்

கையை அறுத்த பெண்ணை தடுத்து நிறுத்திய போலீசார்.

மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி கட்ட எதிர்ப்புகலெக்டர் அலுவலகத்தில் தொழிலாளி தீக்குளிக்க முயற்சி

Published On 2023-08-14 09:49 GMT   |   Update On 2023-08-14 09:49 GMT
  • சடையப்பன் குடும்பத்தினர் உள்பட 10 பேர் சேலம் கலெக்டர் அலுவலகத்திற்கு இன்று வந்தனர்.
  • சடையப்பன் தான் மறைத்து வைத்து எடுத்து வந்த 3 லிட்டர் மண்எண்ணையை தலையில் ஊற்ற முயன்றார். இதனை போலீசார் தடுத்து நிறுத்தினர்.

சேலம்:

சேலம் மாவட்டம் தலைவாசல் அருகே உள்ள காட்டுக்கோட்டை பகுதியைச் சேர்ந்தவர் சடையப்பன் (வயது 38). இவரது மனைவி தெய்வானை (35). இந்த தம்பதிக்கு 2 குழந்தைகள் உள்ளன.

தீக்குளிக்க முயற்சி

இந்த நிலையில் சடையப்பன் குடும்பத்தினர் உள்பட 10 பேர் சேலம் கலெக்டர் அலுவலகத்திற்கு இன்று வந்தனர். அப்போது சடையப்பன் தான் மறைத்து வைத்து எடுத்து வந்த 3 லிட்டர் மண்எண்ணையை தலையில் ஊற்ற முயன்றார். இதனை போலீசார் தடுத்து நிறுத்தினர் .

அப்போது சடையப்ப னின் தங்கை சடையம்மாள் (32) திடீரென பிளேடால் கையை அறுத்தார். இத

னால் பரபரப்பு நிலவியது.

இதையடுத்து போலீசார் அவரை மீட்டு ஆஸ்பத்தி ரிக்கு அழைத்து செல்ல முயன்றனர் . ஆனால் அவர் ஆஸ்பத்திரிக்கு செல்ல மறுத்தார். இைதயடுத்து போலீசார் அவரை சென்று வாகனத்தில் ஏற்றி அரசு ஆஸ்பத்திரிக்கு அழைத்து சென்றனர் . தொடர்ந்து அவருக்கு அங்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

இதுகுறித்து சடையப்பன் கூறுகையில், தங்களது வீட்டின் அருகில் அரசு சார்பில் 60 ஆயிரம் லிட்டர் கொள்ளளவு கொண்ட மேல்நிலை நீர்த் தேக்க தொட்டி கட்டப்பட்டு வருகிறது . இது தங்களுக்கு பெரும் இடைஞ்சலாக உள்ளது. இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் பலமுறை மனு கொடுத்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கா ததால் மன வேதனையில் உள்ளோம். எனவே கலெக்டர் தலையிட்டு இதனை உடனடியாக தடுத்து நிறுத்த வேண்டும், என்றார்.

Tags:    

Similar News