பள்ளத்தில் விழுந்த முதியவரை மீட்பு படையினர் மீட்ட வரும் காட்சி.
ஏற்காடு மலைப்பாதையில் 60 அடி பள்ளத்தில் விழுந்த முதியவர்
- மணி(55). இவர் நேற்று தனது இருச்சர வாகனத்தில் ஏற்காட்டிற்கு வந்து விட்டு மீண்டும் சேலம் நோக்கி திரும்பி கொண்டிருந்தார்.
- ஏற்காடு மலைப்பாதையின் 60 அடி பாளம் அருகில் வந்த போது இருச்சர வாகனத்தை நிறுத்த முயன்றுள்ளார். அப்போது நிலை தடுமாறி சாலையோரம் இருந்த 60 அடி பள்ளத்தில் இருசக்கர வாகனத்துடன் தவறி விழுந்தார்.
ஏற்காடு:
சேலம் மாவட்டம் கன்னங்குறிச்சி கொல்லப்பட்டி பகுதியை சேர்ந்தவர் மணி(55). இவர் நேற்று தனது இருச்சர வாகனத்தில் ஏற்காட்டிற்கு வந்து விட்டு மீண்டும் சேலம் நோக்கி திரும்பி கொண்டிருந்தார்.
ஏற்காடு மலைப்பாதையின் 60 அடி பாளம் அருகில் வந்த போது இருச்சர வாகனத்தை நிறுத்த முயன்றுள்ளார். அப்போது நிலை தடுமாறி சாலையோரம் இருந்த 60 அடி பள்ளத்தில் இருசக்கர வாகனத்துடன் தவறி விழுந்தார்.
அவரது அலறல் சத்தம் கேட்டு அவ்வழியாக சென்றவர்கள் ஏற்காடு போலீசாருக்கும், 108 ஆம்புலன்சுக்கும் தகவல் கொடுத்தனர். தகவலின்பேரில் சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் மற்றும் தீயணைப்பு மீட்பு படையினர் அவரை 60அடி பள்ளத்தில் இருந்து பத்திரமாக மீட்டு சிகிச்சைக்காக சேலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பள்ளத்தில் விழுந்ததில் மணியின் காலில் முறிவு ஏற்பட்டது. மேலும் தலை மற்றும் முதுகு பகுதியிலும் பலத்த காயம் ஏற்பட்டு உள்ளது. இவ்விபத்து குறித்து ஏற்காடு போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.