உள்ளூர் செய்திகள்

சேலம் கோட்டை மாரியம்மன் கோவிலில் ஒவ்வொரு ஆண்டும் ஆடி மாதத்தில் அம்மனுக்கு 22 நாட்கள் திருவிழா கோலாகலமாக கொண்டாடப்படுகிறது. இந்த ஆண்டு ஆடி திருவிழா வருகிற 25-ந் தேதி இரவு பூச்சாட்டுதலுடன் தொடங்குகிறது. இதையொட்டி இன்று காலை கோவிலில் முகூர்த்தக்கால் நடும் நிகழ்ச்சி நடந்தபோது எடுத்த படம்.

ஆடி திருவிழாவை முன்னிட்டுகோட்டை மாரியம்மன் கோவிலில் இன்று முகூர்த்தக்கால் நடப்பட்டது

Published On 2023-07-05 09:18 GMT   |   Update On 2023-07-05 09:18 GMT
  • சேலம் பழைய பஸ் நிலையம் அருகே பிரசித்தி பெற்ற கோட்டை மாரியம்மன் கோவில் அமைந்துள்ளது.
  • இந்த கோவிலில் ஒவ்வொரு ஆண்டும் ஆடி மாதத்தில் அம்மனுக்கு 22 நாட்கள் ஆடி திருவிழா கோலாகலமாக கொண்டாடப்படுகிறது.

சேலம்:

சேலம் பழைய பஸ் நிலையம் அருகே பிரசித்தி பெற்ற கோட்டை மாரியம்மன் கோவில் அமைந்துள்ளது. இந்த கோவிலில் ஒவ்வொரு ஆண்டும் ஆடி மாதத்தில் அம்மனுக்கு 22 நாட்கள் ஆடி திருவிழா கோலாகலமாக கொண்டாடப்படுகிறது.

இந்த திருவிழாவின்போது நூற்றுக்கணக்கான பக்தர்கள் கோவிலில் பொங்கல் வைத்து, மாவிளக்கு ஏற்றி அம்மனை வழிபடுவார்கள். இது தவிர கோவிலில் உருளுதண்டம், அக்னி கரகம், அலகு குத்தி கோவிலுக்கு ஏராளமான பக்தர்கள் வருகை தருவார்கள். கோவி லில் கடந்த 7 ஆண்டுகளுக்கு மேலாக திருப்பணிகள் மேற்கொ ள்ளப்பட்டு வருவதால் கோவிலில் பொங்கல் வைபவம் நிகழ்ச்சி மட்டுமே நடைபெற்று வருகிறது.

தற்போது கோவிலில் 85 சதவீத திருப்பணிகள் நிறைவு பெற்றுள்ளன. ஆவணி மாதம் கும்பாபிஷேகம் நடத்த ஏற்பாடுகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் நடப்பாண்டு ஆடி திருவிழாவை முன்னிட்டு கோவிலில் வருகிற 25-ந் தேதி இரவு பூச்சட்டுதல் விழா நடக்கிறது. இதையொட்டி இன்று காலை கோவிலில் முகூர்த்தக்கால் நடும் நிகழ்ச்சி நடந்தது.

இந்த நிகழ்ச்சியில் இந்து அறநிலையத்துறை இணை ஆணையர் சபர்மதி, உதவி கமிஷனர் ராஜா, கோவில் செயல் அலுவலர் அமுதசுரபி, விழா குழு உறுப்பினர்கள் சாந்தமூர்த்தி, ஜெய், ரமேஷ் பாபு, சுரேஷ்குமார், வினிதா மற்றும் ஏராளமான பக்தர் களும் கலந்து கொண்டு முகூர்த்தக்கால் நட்டனர்.

தொடர்ந்து மாரியம்ம னுக்கு சிறப்பு பூஜைகள் நடத்தப்பட்டன. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு மாரியம் மனை வழிபட்டனர். இதைத்தொடர்ந்து அடுத்த மாதம் 7-ந் தேதி சக்தி அழைப்பும், 9-ந் தேதி முதல் 11-ந் தேதி வரை பொங்கல் மாவிளக்கு பிரார்த்தனை நிகழ்ச்சி நடக்கிறது.

15-ந் தேதி காலை 10 மணிக்கு பால்குட விழா, மகா அபிஷேகம், உற்சவர் அம்மனுக்கு அபிஷேகம், அலங்கார ஆராதனைகள் மற்றும் அன்னதானம் நடைபெறுகிறது. இதேபோல சேலம் மாநகரத்தில் உள்ள அனைத்து மாரியம்மன் கோவில்களிலும் ஆடி திருவிழா முன்னேற்பாடு பணிகள் நடைபெற்று வருவது குறிப்பிடத்தக்கது.

Tags:    

Similar News