ராபின்-பிரமிளா
ஓமலூர் டி.எஸ்.பி. அலுவலகத்தில்காதல் ஜோடி பாதுகாப்பு கேட்டு தஞ்சம்
- மோலாண்டிப்பட்டி பகுதியை சேர்ந்தவர் ராபின்(23), பிரமிளா (19), நாமக்கல் மாவட்டம் பள்ளி பாளையம் பகுதியில் உள்ள இவரும் அதே மில்லில் வேலை செய்து வருகிறார்கள்.
- சேலம் வந்து காதலன் ராபினை ஓமலூர் அருகே பொட்டியபுரம் பெருமாள் கோவிலில் திருமணம் செய்து கொண்டார்.
ஓமலூர்:
சேலம் மாவட்டம் ஓமலூர் அருகே உள்ள மாட்டுக் காரனூர் மோலாண் டிப்பட்டி பகுதியை சேர்ந்தவர் ராபின்(23), நாமக்கல் மாவட்டம் பள்ளி பாளையம் பகுதியில் உள்ள தனியார் நூல் மில்லில் வேலை செய்து வருகிறார்.
நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோடு காடச்ச நல்லூர் பகுதியை சேர்ந்தவர் பிரமிளா (19), இவரும் அதே மில்லில் வேலை செய்து வருகிறார். இதையடுத்து இருவருக்கும் இடையே பழக்கம் ஏற்பட்டு கடந்த ஒரு ஆண்டாக காதலித்து வந்துள்ளனர்.
இவர்களது காதல் விவகாரம் பிரமிளாவின் பெற்றோருக்கு தெரியவர இருவரும் வெவ்வேறு சமூகம் என்பதால் கடுமையாக எதிர்ப்பு தெரிவித்து உள்ளனர். மேலும் வேறு ஒரு நபருடன் திருமணம் செய்ய ஏற்பாடு செய்து உள்ளனர்.
இதைத்தொடர்ந்து வீட்டை விட்டு வெளியேறிய பிரமிளா சேலம் வந்து காதலன் ராபினை ஓமலூர் அருகே பொட்டியபுரம் பெருமாள் கோவிலில் திருமணம் செய்து கொண்டார். தொடர்ந்து இருவரும் உயிருக்கு பாதுகாப்பு கேட்டு ஓமலூர் டி.எஸ்.பி. அலுவலகத்தில் தஞ்சம் அடைந்தனர். இது குறித்து ஓமலூர் டி.எஸ்.பி. மற்றும் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.