உள்ளூர் செய்திகள்

மத்திய அரசு பள்ளிகளில் தமிழ் பயிற்றுவிக்க புது ஏற்பாடு

Published On 2023-07-10 15:13 IST   |   Update On 2023-07-10 15:13:00 IST
  • தமிழக அரசின் தமிழ் கட்டாய மொழி சட்டத்தின்படி 1-ம் வகுப்பு முதல் 10-ம் வகுப்பு வரை தமிழ்பாடத்தை கட்டாயமாக கற்பிக்க வேண்டும்.
  • தமிழக அரசு பள்ளிகளில் மட்டுமின்றி தனியார் சி.பி.எஸ்.இ., ஐ.சி.எஸ்.இ, கேம்பிரிட்ஜ் பாடத்திட்ட பள்ளிகளிலும் தமிழை கட்டாயமாக கற்பிக்க வேண்டும் என பள்ளிகளுக்கு பள்ளிக் கல்வித்துறை அறிவுறுத்தி உள்ளது.

சேலம்:

தமிழக அரசின் தமிழ் கட்டாய மொழி சட்டத்தின்படி 1-ம் வகுப்பு முதல் 10-ம் வகுப்பு வரை தமிழ்பாடத்தை கட்டாயமாக கற்பிக்க வேண்டும்.

தமிழக அரசு பள்ளிகளில் மட்டுமின்றி தனியார் சி.பி.எஸ்.இ., ஐ.சி.எஸ்.இ, கேம்பிரிட்ஜ் பாடத்திட்ட பள்ளிகளிலும் தமிழை கட்டாயமாக கற்பிக்க வேண்டும் என பள்ளிகளுக்கு பள்ளிக் கல்வித்துறை அறிவுறுத்தி உள்ளது.

புது ஏற்பாடு

இந்த நிலையில் அதே நேரத்தில் மத்திய கல்வித்து றையின் நேரடி கட்டுப்பா ட்டில் உள்ள கேந்திரிய வித்யாலயா பள்ளிகளில் அனைத்து மாணவர்களுக்கும் தமிழ் பாடம் கற்பிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.

இதற்காக தமிழக இணைய கல்வி கழகம் என்ற தமிழ்நாடு விர்ச்சுவல் அகாடமி வழியே தமிழ் பாடங்களை ஆடியோ, வீடியோ வடிவில் மாணவர்களுக்கு கற்றுத்தர ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதனால் தமிழகத்தில் உள்ள 45 கேந்திரிய வித்யாலயா பள்ளிகளில் அடுத்த மாதம் முதல் தமிழ் கற்பித்தல் வகுப்புகள் நடத்தப்பட உள்ளன. மேலும் தமிழக பள்ளிக்கல்வித்துறை மற்றும் தமிழ் வளர்ச்சி துறையும் இப்பள்ளிகளுக்கு தமிழ் பாட புத்தகங்கள் வழங்க உள்ளன. இந்த பள்ளிகளில் தமிழ் ஆசிரியர்களை தனியாக நியமிக்கவும் முயற்சி மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

Tags:    

Similar News