உள்ளூர் செய்திகள்
சேலம் புதிய பஸ் நிலைய மேம்பாலத்தில் மோட்டார் சைக்கிள்கள் மோதல்; அரசு ஜீப் டிரைவர் பலி
- வெங்க டேசன் (வயது 48). இவர் நேற்று இரவு குரங்குசாவடி யில் இருந்து மேம்பாலத்தில் ஏறி புதிய பஸ் நிலையம் நோக்கி தனது மோட்டார் சைக்கிளில் வந்து கொண்டிருந்தார்.
- முன்னால் சென்ற மோட்டார் சைக்கிள் மீது இவர் சென்ற மோட்டார் சைக்கிள் எதிர்பாராத விதமாக மோதியது.
சேலம்:
சேலம் அயோத்தியாப்பட்டணம் ஒன்றிய வட்டார வளர்ச்சி அலுவலகத்தில் டிரைவராக பணி புரிந்து வந்தவர் வெங்க டேசன் (வயது 48). இவர் நேற்று இரவு குரங்குசாவடி யில் இருந்து மேம்பாலத்தில் ஏறி புதிய பஸ் நிலையம் நோக்கி தனது மோட்டார் சைக்கிளில் வந்து கொண்டிருந்தார்.
அப்போது முன்னால் சென்ற மோட்டார் சைக்கிள் மீது இவர் சென்ற மோட்டார் சைக்கிள் எதிர்பாராத விதமாக மோதியது. இதில் சென்டர் மீடியனில் மோதிய அவர், தூக்கி வீசப்பட்டு சம்பவ இடத்திலேயே ரத்த வெள்ளத்தில் உயிரிழந்தார்.
இதுகுறித்து தகவல் அறிந்த பள்ளப்பட்டி போலீ சார் அங்கு விரைந்து சென்று அவரது உடலை மீட்டு பிரேத பரிசோத னைக்காக, சேலம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும் விபத்து தொடர்பாக விசாரணை நடத்தி வருகின்றனர்.