உள்ளூர் செய்திகள்
வாழப்பாடி வைத்தியநாதர் கோவிலில் மண்டலாபிஷேக பூஜை
- சிவ பக்தர் சக்கரவர்த்தி தலைமையிலான குழுவினர் ஒன்றிணைந்து ரூ.30 லட்சம் செலவில் தையல்நாயகி உடனுறை வைத்தியநாதருக்கு முதன்முறையாக கற்றளி கோவில் கட்டினர்.
- இக்கோவில் கும்பாபிஷேக விழா கடந்த மாதம் நடைபெற்றது.
வாழப்பாடி:
சேலம் மாவட்டம் வாழப்பாடி பேரூராட்சி பெரியசாமி நகர் பகுதியில் சிவ பக்தர் சக்கரவர்த்தி தலைமையிலான குழுவினர் ஒன்றிணைந்து ரூ.30 லட்சம் செலவில் தையல்நாயகி உடனுறை வைத்தியநாதருக்கு முதன்முறையாக கற்றளி கோவில் கட்டினர். இக்கோவில் கும்பாபிஷேக விழா கடந்த மாதம் நடைபெற்றது. தொடர்ந்து மண்டல அபிஷேக சிறப்பு பூஜை வழிபாடு நடந்து வருகிறது. இந்த வழிபாட்டில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் பெற்று வருகின்றனர்.
ஆசிரியை வளர்மதி புகழ் குடும்பத்தினர் சார்பில் அனைவருக்கும் அன்ன தான வழங்கப்பட்டது. அன்னதானத்திற்கான ஏற்பாடுகளை கோவில் நிர்வாகி சக்கரவர்த்தி தலைமையிலான குழுவினர் செய்திருந்தனர். இன்று மாலை மண்டலாபிஷேக 48 நாள் நிறைவு பூஜை நடைபெறுகிறது.