போராட்டத்தில் கலந்து கொண்டவர்களை படத்தில் காணலாம்.
ஏற்காட்டில் விடுதலை சிறுத்தை கட்சியினர் ஆர்ப்பாட்டம்
- ஏற்காடு புறக்காவல் நிலையம் அருகில் ஏற்காடு விடுதலை சிறுத்தை கட்சியினர் மற்றும் சாலையோர வியாபாரிகள் சங்கத்தினர் இணைந்து கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
- ஆர்ப்பாட்டத்தை தொழிலாளர் விடுதலை முன்னணி மாநில துணை செயலாளர் சரஸ்ராம்ரவி தொடங்கி வைத்தார்.
ஏற்காடு:
சேலம் மாவட்டம் ஏற்காடு ஒண்டிக்கடை பகுதியில் உள்ள ஏற்காடு புறக்காவல் நிலையம் அருகில் ஏற்காடு விடுதலை சிறுத்தை கட்சியினர் மற்றும் சாலையோர வியாபாரிகள் சங்கத்தினர் இணைந்து கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
ஆர்ப்பா ட்டத்தை தொழிலாளர் விடுதலை முன்னணி மாநில துணை செயலாளர் சரஸ்ராம்ரவி தொடங்கி வைத்தார். ஆர்ப் பாட்டத்திற்கு விடுதலை சிறுத்தை கட்சியின் சாலையோர வியாபாரிகள் சங்கத்தின் மாநில துணை செயலாளர் கந்தசாமி தலைமை தாங்கினார்.
இந்த ஆர்ப்பாட்டத்தில் ஏற்காடு நடைபாதை வியாபாரிகளுக்கு உச்ச நீதிமன்றம் வழங்கிய பாதுகாப்பு சட்ட உத்தரவு நடைமுறை படுத்த தவறிய ஏற்காடு ஊராட்சி ஒன்றிய ஆணையாளர் மற்றும் நெடுஞ்சாலை துறை உதவி பொறியாளர் ஆகியோரை ஆர்.டி.ஓ. விசாரணைக்கு உத்தரவிட வேண்டும்.
ஏற்காடு பகுதியில் அரசு கல்லூரி ஒன்று தொடங்க வேண்டும். மலைவாழ் மக்களுக்கும் படித்த மாணவ-மாணவிகளுக்கு கல்வி பொருளாதாரம் மேம்பாடு அடைய மத்திய மாநில அரசு திட்டங்களை மாவட்ட நிர்வாகம் முழுமையாக அமல்படுத்த வேண்டும். கொம்மக்காடு பட்டியல் இன மக்கள் சுடு காடு செல்லும் பாதையை தனி நபர் ஆக்கிரமிப்பு செய்துள்ளதை அப்பகுதி மக்களுக்கு மீட்டு தர வேண்டும்.
தொழிலாளர் நல வாரி யத்தில் பதிவு செய்ய விரும்பும் நபர்களுக்கு பரிந்துரை செய்ய மறுக்கும் நாகலூர் கிராம நிர்வாக அலு
வலர் சரவணன் மற்றும் மாரமங்கலம் கிராம நிர்வாக அலுவலர் பிரபு ஆகியோரிடம் ஆர்.டி.ஓ. விசாரணை நடத்தி இருவரையும் இடமாற்றம் செய்ய வேண்டும் போன்ற கோரிக் கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடத்தினர். ஆர்ப்பாட்டத்தில் ஏற்காடு பொறுப்பு ஒன்றிய செயலாளர் (பொறுப்பு) ராஜேஷ், மூர்த்தி, ராஜா, ரகுராஜ், பிரபு மற்றும் கட்சியினர் பலர் கலந்து கொண்டனர்.