உள்ளூர் செய்திகள்

கொங்கணாபுரம் ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில்தேங்காய் கொப்பரை, நிலக்கடலை விற்பனை

Published On 2023-11-05 08:33 GMT   |   Update On 2023-11-05 08:33 GMT
  • தமிழக அரசின் வேளாண் ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் தேங்காய் கொப்பரை மற்றும் நிலக்கடலை பொது ஏலம் மூலம் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.
  • தொடர்ந்து இப்பகுதியில் நிலக்கடலை அறுவடை பணி நடைபெற்று வரும் நிலையில் தற்போது இம்மையத்தில் நிலக்கடலைக்கான பொது ஏலம் தொடங்கியுள்ளது.

எடப்பாடி:

சேலம் மாவட்டம் சங்ககிரி - ஓமலூர் பிரதான சாலையில் கொங்கணா புரத்தை அடுத்த கரட்டுகாடு பகுதியில் செயல்பட்டு வரும் தமிழக அரசின் வேளாண் ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் தேங்காய் கொப்பரை மற்றும் நிலக்கடலை பொது ஏலம் மூலம் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

இந்த வாரம் நடந்த ஏலத்தில் முதல் தர தேங்காய் பருப்பு குவிண்டால் ஒன்று ரூ.8,188 முதல் ரூ.8,690 வரை விற்பனையானது. 2-ம் தர தேங்காய் கொப்பரைகள் குவிண்டால் ஒன்று ரூ.5,825 முதல் ரூ.8010 வரை விலை போனது. இரு முறை நடைபெற்ற பொது ஏலத்தின் மூலம் ரூ.8 லட்சத்து 50 ஆயிரம் மதிப்புள்ள 80 குவிண்டால் அளவிலான தேங்காய் கொப்பரைகள் விற்பனையானது.

தொடர்ந்து இப்பகுதியில் நிலக்கடலை அறுவடை பணி நடைபெற்று வரும் நிலையில் தற்போது இம்மையத்தில் நிலக்கடலைக்கான பொது ஏலம் தொடங்கியுள்ளது. இதனை சுற்றுப்புற விவசாயிகள் பயன்படுத்தி தாங்கள் விளைவித்த நிலக்கட லையை எந்தவித கமிஷன் மற்றும் மறைமுக கட்டணம் ஏதுமின்றி விற்பனை செய்திகொள்ளுமாறு வேளாண் துறை அலுவலர்கள் தெரிவித்துள்ளனர்.

Tags:    

Similar News