உள்ளூர் செய்திகள்

கனகராஜின் அண்ணன் தனபால் சேலம் அரசு ஆஸ்பத்திரியில் அனுமதி

Published On 2023-09-16 15:15 IST   |   Update On 2023-09-16 15:15:00 IST
  • எடப்பாடி அருகே உள்ள பணிக்கனூரைச் சேர்ந்தவர் தனபால். இவரது தம்பி கனகராஜ் கார் ஓட்டுநராக இருந்தார்.
  • தனபால் கொட நாடு எஸ்டேட் கொலை, கொள்ளை வழக்கில் தொடர்புடைய ஆவணங்களை அழித்ததாக கடந்த 2017-ம் ஆண்டு கைது செய்யப்பட்டு பின்னர் ஜாமீ னில் வெளியே வந்தார்.

சேலம்:

சேலம் மாவட்டம் எடப்பாடி அருகே உள்ள பணிக்கனூரைச் சேர்ந்தவர் தனபால். இவரது தம்பி கனகராஜ் கார் ஓட்டுநராக இருந்தார்.

தனபால் கொட நாடு எஸ்டேட் கொலை, கொள்ளை வழக்கில் தொடர்புடைய ஆவணங்களை அழித்ததாக கடந்த 2017-ம் ஆண்டு கைது செய்யப்பட்டு பின்னர் ஜாமீ னில் வெளியே வந்தார்.

இதனிடையே கடந்த 2020-ம் ஆண்டு பதிவு செய்யப்பட்ட நில மோசடி வழக்கில் கடந்த ஜுலை மாதம் 29-ந் தேதி தனபால் கைது செய்யப்பட்டார். இதையடுத்து சேலம் மத்திய சிறையில் அடைக்கப்பட்ட அவருக்கு நெஞ்சுவலி ஏற்பட்டு கோவை அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்றார். பின்னர் இந்த வழக்கிலும் ஜாமீன் பெற்றார்.

இந்த நிலையில் இவர் கடந்த சில நாட்களாக கொடநாடு வழக்கு தொடர்பாக பல்வேறு குற்றச்சாட்டுகளை முன்வைத்து வந்தார்.

இதனிடையே கடந்த 14-ந் தேதி கோவை சி.பி.சி.ஐ.டி அலுவலகத்திற்கு தனபால் விசாரணைக்கு ஆஜராகினார். இந்த நிலையில் இன்று காலை வீட்டிலிருந்த அவருக்கு மீண்டும் நெஞ்சு வலி ஏற்பட்டது. இதையடுத்து 108 ஆம்புலன்ஸ் மூலம் எடப்பாடி அரசு மருத்துவ மனைக்கு கொண்டு சென்றனர்.

அங்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டு பின்னர் மேல் சிகிச்சைக்காக சேலம் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு உள்ளார். 

Tags:    

Similar News