உள்ளூர் செய்திகள்

பட்டாசு கடைகளில் ஆய்வு-விபத்து இல்லாமல் மாசற்ற தீபாவளியை கொண்டாட வேண்டும்

Published On 2023-11-10 09:43 GMT   |   Update On 2023-11-10 09:43 GMT
  • பட்டாசு கடைகளில் அரசின் அறிவுறுத்தல் படி முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு உள்ளன.
  • சிவகாசியில் இருந்து அதிக அளவில் புதிய பட்டாசுகள் இறக்குமதி செய்யப்பட்டு விற்பனைக்கு வைக்கப்பட்டுள்ளன. ஒவ்வொரு கடையிலும் 30 முதல் 40 லட்சம் வரை பட்டாசுகள் குவித்து வைக்கப்பட்டுள்ளன.

சேலம்:

சேலம் புதிய பஸ் நிலையம் மற்றும் பழைய பஸ் நிலைய பகுதியில் தற்காலிகமாக அமைக்கப்பட்ட பட்டாசு கடைகளை கலெக்டர் கார்மேகம் ஆய்வு செய்தார். அப்போது பட்டாசு கடைகளில் மேற்கொள்ளப்பட்டுள்ள பாதுகாப்புகள் குறித்தும் அதிகாரிகளிடம் கேட்டறிந்தார்.

தொடர்ந்து நிருபர்க ளிடம் அவர் கூறியதாவது:-

பட்டாசு கடைகளில் அரசின் அறிவுறுத்தல் படி முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு உள்ளன. சேலம் பழைய பஸ் நிலையம், புதிய பஸ் நிலையம் மற்றும் இரும்பாலை பகுதி என மொத்தம் 143 தற்காலிக பட்டாசு கடைகள் அமைக்கப்பட்டுள்ளன.ஒவ்வொரு கடைகளுக்கும் 3½ இடைவெளி விட்டு கடைகள் அமைக்கப்பட்டுள்ளது.

சிவகாசியில் இருந்து அதிக அளவில் புதிய பட்டாசுகள் இறக்குமதி செய்யப்பட்டு விற்பனைக்கு வைக்கப்பட்டுள்ளன. ஒவ்வொரு கடையிலும் 30 முதல் 40 லட்சம் வரை பட்டாசுகள் குவித்து வைக்கப்பட்டுள்ளன.

விபத்து இல்லாமல் மாசற்ற வகையில் தீபாவளியை அனைவரும் கொண்டாட வேண்டும். அரசின் அறிவுறுத்தல் படி அனைவரும் ஒத்துழைத்து பாதுகாப்பாக செயல்பட வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.

Tags:    

Similar News