உள்ளூர் செய்திகள்

கள்ளக்காதல் விவகாரத்தில்போலீஸ் நிலையம் முற்றுகை

Published On 2023-07-18 09:09 GMT   |   Update On 2023-07-18 09:09 GMT
  • கார்த்தி (25). மெக்கானிக் தொழில் செய்து வருகிறார். இவருக்கு இன்னும் திருமணம் ஆகவில்லை.
  • அதே பகுதியை சேர்ந்த திருமணமான ஒரு பெண்ணுக்கும் கார்த்திக்கும் இடையே கடந்த சில மாதங்களுக்கு முன்பு பழக்கம் ஏற்பட்டு கள்ளத் தொடர்பாக மாறியது.

மேட்டூர்:

சேலம் மாவட்டம் ஜலகண்டாபுரத்தை அடுத்த செலவடை கிராமத்தைச் சேர்ந்தவர் சேட்டு. இவரது மகன் கார்த்தி (25). மெக்கானிக் தொழில் செய்து வருகிறார். இவருக்கு இன்னும் திருமணம் ஆகவில்லை.

கள்ளத்தொடர்பு

அதே பகுதியை சேர்ந்த திருமணமான ஒரு பெண்ணுக்கும் கார்த்திக்கும் இடையே கடந்த சில மாதங்களுக்கு முன்பு பழக்கம் ஏற்பட்டு கள்ளத் தொடர்பாக மாறியது.

இதையடுத்து கடந்த வாரம் வீட்டை விட்டு வெளியேறிய அந்த பெண் கார்த்திக்குடன் ஊரைவிட்டு சென்றதாக தெரிகிறது. இது தொடர்பாக பெண்ணின் உறவினர்கள் ஜலகண்டாபுரம் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தனர்.

முற்றுகை

அதன் பேரில் போலீசார் விசாரணை நடத்தி வந்தனர். இந்நிலையில் இருவரையும் பிடித்து இன்று காலை போலீஸ் நிலையத்திற்கு அழைத்து வந்த போலீசார் விசாரணை நடத்தினர்.

இந்த நிலையில் இதுகுறித்து தகவல் அறிந்த பெண்ணின் உறவினர்கள் சுமார் 100-க்கும் மேற்பட்டோர், ஜலகண்டாபுரம் போலீஸ் நிலையத்தை முற்றுகையிட்டனர். இதனால் பரபரப்பு ஏற்பட்டது. போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

Similar News