உள்ளூர் செய்திகள்

சேலம் மார்க்கெட்டில் தக்காளியை தேர்வு செய்து வாங்கும் வியாபாரிகள். 

சேலம் மார்க்கெட்டுகளில்தக்காளி விலை ரூ.75 ஆக உயர்வு

Published On 2023-06-26 15:00 IST   |   Update On 2023-06-26 15:00:00 IST
  • குறைந்த அளவில் பயிரிடப்பட்டுள்ள இடங்களில் தற்போது பகலில் வெயில், மாலை, இரவில் மழையால் தக்காளி பழங்கள் அழுகி வருகிறது.
  • அதே நேரம் ஆந்திராவில் இருந்து தமிழக மார்க்கெட்டுகளுக்கு வந்து கொண்டிருந்த தக்காளி வரத்தும் சரிந்துள்ளது.

சேலம்:

சேலம், தர்மபுரி, கிருஷ்ணகிரி, தேனி, விருதுநகர், நெல்லை, திண்டுக்கல், கரூர், ஈரோடு மாவட்டங்களில் தக்காளி விளைச்சல் எதிர்பார்த்த அளவு இல்லை.

குறைந்த அளவில் பயிரிடப்பட்டுள்ள இடங்களில் தற்போது பகலில் வெயில், மாலை, இரவில் மழையால் தக்காளி பழங்கள் அழுகி வருகிறது.

அதே நேரம் ஆந்திராவில் இருந்து தமிழக மார்க்கெட்டுகளுக்கு வந்து கொண்டிருந்த தக்காளி வரத்தும் சரிந்துள்ளது. இதனால் மாவட்டத்திற்கு தக்காளி வரத்து பாதியாக சரிந்துள்ளது. இதனால் விலை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.

சேலம் உழவர் சந்தைகளில் 50 முதல் 55 ரூபாய்க்கு தக்காளி விற்பனை செய்யப்படுகிறது. வெளிமார்க்கெட்டில் நாட்டு தக்காளி முதல் ரகம் 60 ரூபாய்க்கு விற்றது. தற்போது ஒரே நாளில் ரூ.30 உயர்ந்து 90 ரூபாயாக அதிகரித்துள்ளது.

55 ரூபாய்க்கு விற்ற 2-ம் ரகம், 70 ரூபாயாக உயர்ந்துள்ளது. குறிப்பாக நேற்று 25 கிலோ எடை கொண்ட ஒரு கிரேடு தக்காளி 1500 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டது. இந்த நிலையில் இன்று ஒரே நாளில் 25 கிலோ எடை கொண்ட ஒரு கிரேடு தக்காளி 700 ரூபாய் வரை அதிகரித்து, 2,200 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. இதனால் கிலோவிற்க்கு 30 ரூபாய் வரை விலை உயர்ந்து ஒரு கிலோ 90 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. வரும் நாட்களில் மேலும் தக்காளியின் விலை உயரும் என வியாபாரிகள் தெரிவித்துள்ளனர். இந்த விலை உயர்வால் நடுத்தர மக்கள் பெரிதும் பாதிப்படைந்துள்ளனர்.

சேலம் உழவர் சந்தையில் மற்ற காய்கறிகள் விலை விவரம்(ஒரு கிலோவுக்கு) வருமாறு:-

உருளைக்கிழங்கு முதல் தரம் ரூ.60, 2-ம் தரம் ரூ.30, சின்னவெங்காயம் முதல் தரம் ரூ.60, 2-ம் தரம் ரூ.55, பெரியவெங்காயம் முதல் தரம் ரூ.25, 2-ம் தரம் ரூ.22, பச்சை மிளகாய் முதல் தரம் ரூ.78, 2-ம் தரம் ரூ.76, கத்தரிக்காய் முதல் தரம் ரூ.44, 2-ம் தரம் ரூ.40, வெண்டைக்காய் முதல் தரம் ரூ.36, 2-ம் தரம் ரூ.34, முருங்கைக்காய் முதல் தரம் ரூ.40, 2-ம் தரம் ரூ.20, பீர்க்கங்காய் முதல் தரம் ரூ.50, 2-ம் தரம் ரூ.46, சுரைக்காய் முதல் தரம் ரூ.25, 2-ம் தரம் ரூ.22, முள்ளங்கி முதல் தரம் ரூ.35, 2-ம் தரம் ரூ.32, சேனை கிழங்கு முதல் தரம் ரூ.50, 2-ம் தரம் ரூ.30, கருணைக்கிழங்கு முதல் தரம் ரூ.50, 2-ம் தரம் ரூ.45.

Tags:    

Similar News