உள்ளூர் செய்திகள்

சங்க உறுப்பினர்கள் குமாரசாமி தலைமையில் அதிகாரியிடம் மனு கொடுத்த காட்சி.

கைத்தறி நெசவாளர்களுக்கு தனி மருத்துவ சேவை திட்டத்தை மீண்டும் அமல்படுத்த வேண்டும்

Published On 2023-10-15 14:17 IST   |   Update On 2023-10-15 14:17:00 IST
  • கைத்தறி நெசவாளர் கூட்டுறவு உற்பத்தி, விற்பனை சங்க மகாசபை கூட்டம் நடந்தது.
  • தனி மருத்துவ சேவை திட்டத்தை மீண்டும் செயல்படுத்தி கூட்டுறவு கைத்தறி நெசவாளர் குடும்பத்தினர் ஆரோக்கியமாக வாழ வழிவகை செய்ய வேண்டும்.

சேலம்:

சேலம் அம்மாப்பேட்டை கைத்தறி நெசவாளர் கூட்டுறவு உற்பத்தி, விற்பனை சங்க மகாசபை கூட்டம் நடந்தது. இதில் சங்க உறுப்பினர்கள் குமாரசாமி தலைமையில் கைத்தறி துறை உயரதிகாரியிடம் ஒரு கோரிக்கை மனு கொடுத்தனர். அந்த மனுவில் கூறி இருப்பதாவது:-

கூட்டுறவு கைத்தறி நெசவாளர் குடும்பத்திற்கு தனியாக தேசிய மருத்துவ காப்பீட்டு திட்டம் ஆண்டுக்கு ரூ.15,000 வீதம் புற நோயாளி, உள் நோயாளி மருத்துவ சிகிச்சை பெற அங்கீகரிக்கப்பட்ட தனியார் மருத்துவமனைகளில் கடந்த காலத்தில் மருத்துவ சிகிச்சை அளிக்கப்பட்டது.

பிறகு தொகை ஆண்டுக்கு ரூ.37,500 என்ற விகிதத்தில் மருத்துவ சிகிச்சையை கூட்டுறவு கைத்தறி நெசவாளர் குடும்பத்தினர் பெற்று வந்தனர்.

பிறகு இந்த திட்டம் அடியோடு நிறுத்தப்பட்டதால் நெசவாளர் குடும்பத்தினர் நோய்வாய் படும் நேரத்தில் பொருளாதார வசதி இல்லாத காரணத்தினால் எம்ஆர்ஐ, ஸ்கேன், அல்ட்ரா ஸ்கேன், எக்ஸ்ரே போன்ற பரிசோதனைகள் செய்து மருந்து மாத்திரைகளை பெற்று ஆரோக்கியமான வாழ்வுக்கு வழியற்ற நிலையில் உள்ள கூட்டுறவு கைத்தறி நெசவாளர் குடும்பத்திற்கு தற்போதைய விலைவாசி உயர்வுக்கு ஏற்ப ஆண்டுக்கு சுமார் ஒரு லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் அங்கீகரிக்கப்பட்ட மருத்துவமனைகளில் மருத்துவ சேவை பெற கடந்த காலத்தை போல தனி மருத்துவ சேவை திட்டத்தை மீண்டும் செயல்படுத்தி கூட்டுறவு கைத்தறி நெசவாளர் குடும்பத்தினர் ஆரோக்கியமாக வாழ வழிவகை செய்ய வேண்டும். இவ்வாறு அவர்கள் அதில் கூறி உள்ளனர். மனு கொடுத்தபோது சங்க உறுப்பினர்கள் கிருஷ்ணன், பழனிசாமி, மாணிக்கம், ராமசாமி, செங்கோடன், சங்க நிர்வாகிகள் உள்பட பலர் உடனிருந்தனர்.

Tags:    

Similar News