4 ஆண்டு ஒருங்கிணைந்த ஆசிரியர் படிப்பில் சேருவதற்கான தேசிய பொது நுழைவுத் தேர்வு
- இளநிலை படிப்புகளில் சேருவதற்கு தேசிய பொது நுழைவுத் தேர்வு (என்சிஇடி) நடத்தப்படுகிறது.
- இந்த தேர்வு எழுத கல்வி தகுதி பிளஸ்- 2 ேதர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
சேலம்:
4 ஆண்டு ஒருங்கிணைந்த ஆசிரியர் கல்வி திட்டத்தின் கீழ் தேர்வு செய்யப்பட்ட மத்திய, மாநில பல்கலைக்கழகங்கள், கல்வி நிறுவனங்கள், ஐ.ஐ.டி.கள், என்.ஐ.டி.கள் மற்றும் அரசு கல்லூரிகளில் மாணவ- மாணவிகள் பி.ஏ. பி.எட், பி.காம். பி.எட், பி.எஸ்.சி. பி.எட். உள்ளிட்ட இளநிலை படிப்புகளில் சேருவதற்கு தேசிய பொது நுழைவுத் தேர்வு (என்சிஇடி) நடத்தப்படுகிறது. இந்த தேர்வு எழுத கல்வி தகுதி பிளஸ்- 2 ேதர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
இந்த தேர்வை இந்திய அரசு கல்வி அமைச்சகத்தின் என்.டி.ஏ. எனப்படும் தேசிய தேர்வு முகமை நடத்துகிறது.அதன்படி நடப்பாண்டுக்கான தேசிய பொது நுழைவுத் தேர்வு - 2023 அறிவிப்பு கடந்த சில வாரங்களுக்கு முன்பு வெளியிட்டது. இந்த தேர்வுக்கு 16 ஆயிரம் மாணவ- மாணவிகள் பதிவு செய்துள்ளனர்.
இந்த நிலையில் எழுத்து தேர்வு நாளை (9-ந்தேதி) 3 மணி நேரம் நாடு முழுவதும் 127 நகரங்களில் கனிணி வழியாக நடைபெறுகிறது. மதியம் 2 மணிக்கு தொடங்கும் இந்த தேர்வு மாலை 5 மணிக்கு முடிவடைகிறது. இதில் சேலம், நாமக்கல் மாவட்டத்தில் இருந்தும் மாணவ - மாணவிகள் பங்கேற்று தேர்வு எழுத உள்ளனர்.
விண்ணப்பதாரர்கள் ஹால்டிக்கெட் எனப்படும் அட்மிட் கார்டை https://ncet.samarth.ac.in/ என்ற இணையதளத்தில் விண்ணப்ப எண், பிறந்த தேதி உள்ளீடு செய்து பதிவிறக்கம் செய்யுமாறும், அதில் தேர்வு தேதி மற்றும் தேர்வு நகரம் போன்றவைகளை சரிபார்த்து கொள்ளுமாறும் ேதர்வாணையம் அறிவுறுத்தியுள்ளது.