உள்ளூர் செய்திகள்

ஏற்காட்டில் காலாவதியான மருந்து, மாத்திரைகளை கொட்டிய மர்ம நபர்கள்

Published On 2023-12-01 09:50 GMT   |   Update On 2023-12-01 09:50 GMT
  • ஏழைகளின் ஊட்டி என்று அழைக்கப்படும் ஏற்காடு சேலத்திற்கு அருகாமையில் கிழக்கு தொடர்ச்சி மலை சேர்வராயன் மலைத்தொடரில் உள்ள மலைத்தளமாகும்.
  • ஏற்காடு மலைப்பாதை, வனப்பகுதியில் நேற்று இரவு காலாவதியான மாத்திரை, மருந்து உள்ளிட்ட கழிவுகளை மர்ம நபர்கள் கொட்டிவிட்டு சென்றுள்ளனர். இது குறித்து வனத்துறை பறக்கும் படையினருக்கு தகவல் கிடைத்தது.

ஏற்காடு:

ஏழைகளின் ஊட்டி என்று அழைக்கப்படும் ஏற்காடு சேலத்திற்கு அருகாமையில் கிழக்கு தொடர்ச்சி மலை சேர்வராயன் மலைத்தொடரில் உள்ள மலைத்தளமாகும். இது கடல் மட்டத்திலிருந்து 4969 அடி உயர்த்தில் உள்ளது. இதன் பரப்பளவு 382.67 ச.கிமீ. ஆகும்.

ஏற்காட்டில் அண்ணா பூங்கா, தோட்டக்கலைதுறை பண்ணை, தாவரவியல் பூங்கா, மணிப்பாறை, கிள்ளியூர் நீர்வீழ்ச்சி, லேடீஸ் சீட், ஜென்ஸ், சில்ரன்ஸ் சீட், சேர்வராயன் கோவில், பட்டு பண்ணை, ரோஜா தோட்டம், மான்பூங்கா உள்ளிட்ட சுற்றுலா தலங்கள் உள்ளன.

இந்த சுற்றுலா தலங்களை குடும்பத்துடன் கண்டுகளிக்க தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும், வெளிமாநிலங்களில் இருந்தும் தினமும் சுற்றுலா பயணிகள் வருகின்றனர்.

இந்த நிலையில் ஏற்காடு மலைப்பாதை, வனப்பகுதியில் நேற்று இரவு காலாவதியான மாத்திரை, மருந்து உள்ளிட்ட கழிவுகளை மர்ம நபர்கள் கொட்டிவிட்டு சென்றுள்ளனர். இது குறித்து வனத்துறை பறக்கும் படையினருக்கு தகவல் கிடைத்தது.

இதையடுத்து அதிகாரிகள் அங்கு விரைந்து வந்து வன விலங்குகள், கால்நடைகள் சாப்பிடும் முன் காலாவதியான மருத்துவ கழிவுகளை சேகரித்து பாதுகாப்பாக அப்புறப்படுத்தினார்கள். மேலும் காலாவதியான மருந்து, மாத்திரைகளின் நிறுவனம் தயாரிப்பு தேதியை ஆய்வு செய்தனர்.

இந்த மருத்துவ கழிவுகள் எந்த வண்டியில் எடுத்து வரப்பட்டது? கழிவுகளை வனப்பகுதியில் கொட்டிய மர்ம நபர்கள் யார்? என பறக்கும் படையினர் தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Tags:    

Similar News