உள்ளூர் செய்திகள்

திருமண விசேஷங்கள் இல்லாததால் பூக்களின் விலை வீழ்ச்சி

Published On 2023-10-10 13:43 IST   |   Update On 2023-10-10 13:43:00 IST
  • பரமத்தி வேலூரில் செயல்பட்டு வரும் தினசரி ஏல மார்க்கெட்டிற்கும் கொண்டு சென்று பூக்களை விற்பனை செய்து வருகின்றனர்.
  • பூக்களை வாங்கி செல்வதற்கு பரமத்தி வேலூர், வேலாயுதம்பாளையம் சுற்று வட்டார பகுதிகளைச் சேர்ந்த வியாபாரிகள் வருகின்றனர்.

பரமத்தி வேலூர்:

நாமக்கல் மாவட்டம் பரமத்தி வேலூர் தாலுகா கண்டிபாளையம், வடகரையாத்தூர், ஜேடர்பாளையம், ஆனங்கூர், பாகம்பாளையம், தண்ணீர் பந்தல், நகப்பாளையம், செல்லப்பம்பாளையம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் குண்டுமல்லி முல்லை, சம்பங்கி, அரளி, ரோஜா, செவ்வந்தி, கனகாம்பரம் உள்ளிட்ட பல்வேறு வகையான பூக்களை விவசாயிகள் பயிர் செய்துள்ளனர்.

பூக்கள் பூக்கும் தருவாய்க்கு வரும்போது கூலி ஆட்கள் மூலம் பூக்களைப் பறித்து உள்ளூர் பகுதிகளுக்கு வரும் வியாபாரிகளுக்கும், பரமத்தி வேலூரில் செயல்பட்டு வரும் தினசரி ஏல மார்க்கெட்டிற்கும் கொண்டு சென்று பூக்களை விற்பனை செய்து வருகின்றனர்.

பூக்களை வாங்கி செல்வதற்கு பரமத்தி வேலூர், வேலாயுதம்பாளையம் சுற்று வட்டார பகுதிகளைச் சேர்ந்த வியாபாரிகள் வருகின்றனர்.

நேற்று குண்டுமல்லி கை கிலோ ரூ.500-க்கும், சம்பங்கி ரூ.50- க்கும், அரளி ரூ.80- க்கும், ரோஜா ரூ.150- க்கும், முல்லைப் பூ ரூ.400- க்கும், செவ்வந்திப்பூ ரூ.100- க்கும், கனகாம்பரம் ரூ.450-க்கும் வாங்கிச் சென்றனர். புரட்டாசி மாதம் திருமணம் மற்றும் கோவில் விசேஷங்கள் அதிகமாக இல்லாததால் பூக்கள் விலை சரிவடைந்துள்ளது.

Tags:    

Similar News