உள்ளூர் செய்திகள்
கடன் வசூலில் முறைகேடு: சேலம் அருகே மகளிர் குழுவினர் தர்ணா
- சேலம் அருகே மகுடஞ்சாவடி முருகன் கோவில் பகுதியில் திருமணிமுத்தாறு விவசாயிகள் உற்பத்தியாளர் நிறுவனம் செயல்பட்டு வருகிறது.
- மகளிர் சுய உதவி குழுக்கள் தலா 2 லட்ச ரூபாய் கடன் பெற்று பிரதி மாதம் தோறும் நபர் ஒன்றுக்கு 2500 ரூபாய் செலுத்தி வந்தனர். இவ்வாறு 17 மாதங்கள் பணத்தை கட்டினர்.
காகாபாளையம்:
சேலம் அருகே மகுடஞ்சாவடி முருகன் கோவில் பகுதியில் திருமணிமுத்தாறு விவசாயிகள் உற்பத்தியாளர் நிறுவனம் செயல்பட்டு வருகிறது. இந்த நிறுவனம் கிராமங்களில் உள்ள மகளிர் சுய உதவி குழுவிற்கு நிதி உதவி செய்கிறது. இந்நிலையில் தப்பகுட்டை பகுதியைச் சேர்ந்த மகளிர் சுய உதவி குழுக்கள் தலா 2 லட்ச ரூபாய் கடன் பெற்று பிரதி மாதம் தோறும் நபர் ஒன்றுக்கு 2500 ரூபாய் செலுத்தி வந்தனர். இவ்வாறு 17 மாதங்கள் பணத்தை கட்டினர்.
அந்த பணத்தை நிதி நிறுவனத்தினர் வங்கியில் கட்டாமல் பெண்களை ஏமாற்றியதாக தெரிகிறது. இதையடுத்து மகளிர் சுய உதவி குழுக்களைச் சேர்ந்த பெண்கள் இன்று 12 மணி முதல் நிதி நிறுவன வாசலில் அமர்ந்து தர்ணாவில் ஈடுபட்டனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.