உள்ளூர் செய்திகள்

பொருளாளர் தாரை ராஜகணபதி தலைமையில் ஆர்ப்பாட்டம் நடந்தது

சேலத்தில் மெழுகுவர்த்தி ஏந்தி காங்கிரஸ் போராட்டம்

Published On 2023-07-27 14:50 IST   |   Update On 2023-07-27 14:50:00 IST
  • சேலம் மாநகர் மாவட்ட காங்கிரஸ் கட்சி சார்பாக சேலம் வடக்கு, மேற்கு,தெற்கு ஆகிய மூன்று தொகுதிகளில் மெழுகுவர்த்தி ஏந்தி கண்டன ஆர்ப்பாட்டத்தை நடந்தது.
  • சேலம் வடக்கு தொகுதியில் சேலம் மாநகர் மாவட்ட தலைவர் ஏ.ஆர்.பி பாஸ்கர் தலைமையில் நடைபெற்றது.

சேலம்:

மணிப்பூரில் பெண்கள் மீது நடந்த வன்கொடுமையை கண்டித்து சேலம் மாநகர் மாவட்ட காங்கிரஸ் கட்சி சார்பாக சேலம் வடக்கு, மேற்கு,தெற்கு ஆகிய மூன்று தொகுதிகளில் மெழுகுவர்த்தி ஏந்தி கண்டன ஆர்ப்பாட்டத்தை நடந்தது.

ஆர்ப்பாட்டம்

சேலம் வடக்கு தொகுதியில் சேலம் மாநகர் மாவட்ட தலைவர் ஏ.ஆர்.பி பாஸ்கர் தலைமையில் நடைபெற்றது. மேற்கு தொகுதியில் மாநகரப் பொருளாளர் தாரை ராஜ கணபதி தலைமையிலும் ,தெற்கு தொகுதியில் வர்த்தக பிரிவு தலைவர் எம்.டி சுப்பிரமணியம் தலைமை யிலும் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்தில் துணை மேயர் சாரதாதேவி, மாநில பொதுக்குழு உறுப்பி னர்கள் ஷானவாஸ், பச்சப்பட்டி பழனி, மெடிக்கல் பிரபு, ஷேக் இமாம், ரகுராஜ், எம்.ஆர்.சுரேஷ், கவுன்சிலர் கிரிஜா, சிறுபான்மை பிரிவு மாநில துணைத்தலைவர் அஷ்ரப் அலி, முன்னாள் மாநகர தலைவர் மேகநாதன், மாநகரத் துணைத் தலைவர் மொட்டையாண்டி, மாநகர பொதுச் செயலாளர்கள் குமரேசன், வக்கீல்கார்த்தி, கோபிகுமரன், ராஜ்குமார், சீனிவாசன், உடையாப்பட்டி பிரகாஷ், விவசாயபிரிவு சிவகுமார், மண்டல தலை வர்கள் சாந்தமூர்த்தி, நிஷார் அகமது, ராமன், நாகராஜ், நடராஜ், கந்தசாமி, மோகன், கோவிந்தன், ஓ.பி. சி பிரிவு மாநில பொதுச் செயலாளர் பர்வேஸ், பாஸ்கர் ரவி, சிறுபான்மை பிரிவு மாநில துணைத் தலைவர் யாக்கோப், ஆர்.டி.ஐ. பிரிவு மாநகர தலைவர் தாஜூம், இளைஞர் காங்கிரஸ் விஜயராஜ், பிரபுராஜ், பாலாஜி கோவிந்தன், ரத்தினவேல், பாண்டியன் மகிளா காங்கிரஸ் மாநகர தலைவி புஷ்பா பாண்டியன், டிவிஷன் தலைவர்கள் உள்பட பலர் கலந்துகொண்டனர்.

Tags:    

Similar News