உள்ளூர் செய்திகள்

விலை உயர்வை கண்டித்துகாய்கறிகளுக்கு பால் ஊற்றி போராட்டம்

Published On 2023-07-19 14:55 IST   |   Update On 2023-07-19 14:55:00 IST
  • தக்காளி, பருப்பு, வெங்காயம், உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்களின் விலை கடுமையாக உயர்ந்துள்ளதால் மக்கள் மிகவும் பாதிக்கப்பட்டு வருகின்றனர்.
  • விலைவாசி உயர்வை கட்டுப்படுத்த கோரி தமிழக ம் முழுவதும் பல்வேறு அரசியல் கட்சிகள் மற்றும் அமைப்புகள் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்று வருகிறது.

சேலம்:

நாடு முழுவதும் அத்தியாவசிய உணவுப் பொருட்களின் விலை உயர்ந்துள்ளது குறிப்பாக தக்காளி, பருப்பு, வெங்காயம், உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்களின் விலை கடுமையாக உயர்ந்துள்ளதால் மக்கள் மிகவும் பாதிக்கப்பட்டு வருகின்றனர். விலைவாசி உயர்வை கட்டுப்படுத்த கோரி தமிழக ம் முழுவதும் பல்வேறு அரசியல் கட்சிகள் மற்றும் அமைப்புகள் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்று வருகிறது. அதன் அடிப்படையில் புரட்சிகர சோசியலிஸ்ட் கட்சி சார்பில் சேலம் கலெக்டர் அலுவலகம் அருகே இன்று அத்தியாவசிய உணவுப் பொருட்கள் விலையை கட்டுப்படுத்த வலியுறுத்தி நூதன முறையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. மாவட்ட செயலாளர் ராஜேந்திரன் தலைமை தங்கினார். ஆர்ப்பாட்டத்தில் மாநில செயலாளர் ஜீவானந்தம் உள்ளிட்ட ஏராளமான நிர்வாகிகள் கலந்து கொண்டு அத்தியாவசிய பொருட்கள் விலை உயர்வை கட்டுப்படுத்தாத மத்திய அரசை கண்டித்து பல்வேறு கோஷங்களை எழுப்பினர். இதனை தொடர்ந்து தக்காளி, வெங்காயம், உள்ளிட்டவைகளை மாலையாக அணிவித்தும் பருப்பு மற்றும் அத்தியாவசிய உணவுப் பொருட்களின் மீது பாலை ஊற்றி இறுதி சடங்கு செய்து நூதன முறையில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

Tags:    

Similar News