உள்ளூர் செய்திகள்

தனியார் பஸ்களில் பயன்படுத்தப்பட்ட ஏர்ஹாரன்களை பறிமுதல் செய்த காட்சி.

சங்ககிரியில் தனியார் பஸ்களில் ஏர்ஹாரன்கள் பறிமுதல்

Published On 2023-10-10 09:47 GMT   |   Update On 2023-10-10 09:48 GMT
  • சங்ககிரி புதிய பஸ் ஸ்டாண்டில் தனியார் மற்றும் அரசு பஸ்களில் அதிக ஒலி எழுப்பும் ஏர்ஹாரன்கள் பொருத்தப்பட்டுள்ளதா என தணிக்கை மேற்கொண்டனர்.
  • அதிக ஒலி எழுப்பக்கூடிய ஏர்ஹாரன்கள் பொறுத்தி இருந்த 7 தனியார் பஸ்களுக்கு சோதனை செய்து ஏர்ஹாரன்களை பறிமுதல் செய்து அபராதம் விதித்தனர்.

சங்ககிரி:

சேலம் மாவட்ட கலெக்டர் கார்மேகம் உத்தரவின்பேரில் சங்ககிரி வட்டார போக்குவரத்து அலுவலர் சுப்பிரமணியன் தலைமையில் மோட்டார் வாகன ஆய்வாளர்கள் செந்தில்குமார், புஷ்பா ஆகியோர் சங்ககிரி புதிய பஸ் ஸ்டாண்டில் தனியார் மற்றும் அரசு பஸ்களில் அதிக ஒலி எழுப்பும் ஏர்ஹாரன்கள் பொருத்தப்பட்டுள்ளதா என தணிக்கை மேற்கொண்டனர். அப்போது அதிக ஒலி எழுப்பக்கூடிய ஏர்ஹாரன்கள் பொறுத்தி இருந்த 7 தனியார் பஸ்களுக்கு சோதனை செய்து ஏர்ஹாரன்களை பறிமுதல் செய்து அபராதம் விதித்தனர். மேலும் அதிக ஒலி எழுப்பும் ஒலிப்பான்களால் ஏற்படும் தீமைகள் குறித்து எடுத்துரைத்து விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.

Tags:    

Similar News