சேலம் அரசு பள்ளி விடுதி மாணவர்கள் சேர்க்கைக்கான விளையாட்டுப் போட்டியில் குண்டு எறிதலில் இலக்கை நோக்கி வீசும் மாணவன்.
விளையாட்டு விடுதிகளில் மாணவ-மாணவியர் சேர்க்கை
- 7-ம் வகுப்பு மற்றும் 8-ம் வகுப்பு ஆகிய வகுப்புகளின் சேர்க்கைக்கான மாவட்ட அளவிலான தேர்வுப்போட்டிகள் இன்று சேலம் காந்தி விளையாட்டரங்கத்தில் நடைபெற்றது.
- பயிற்சி கலகெடர் சங்கேத் பல்வந்த் வாகே தொடங்கி வைத்தார்.
சேலம்:
தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் மூலமாக பன்ளிகளில் பயிலும், மாணவ-மாணவியர் விளையாட்டுத் துறையில் சாதனைகள் புரிவதற்கு ஏற்ப விளையாட்டு பயிற்சி, தங்குமிட வசதி மற்றும் சத்தான உணவுடன் கூடிய விளையாட்டு விடுதிகள் மற்றும் முதன்மை நிலை விளையாட்டு மையங்கள் செயல்பட்டு வருகின்றன.
மாணவர்களுக்கான விளையாட்டு விடுதிகள் மதுரை, திருச்சி, திருநெல்வேலி, கிருஷ்ணகிரி கோயம்புத்தூர், கடலூர், தஞ்சாவூர், அரியலூர், தூத்துக்குடி, ஊட்டி, விழுப்புரம், சிவகங்கை, தேனி, ராமநாதபுரம், சென்னை, நெய்வேலி மற்றும் நாமக்கல் ஆகிய இடங்களில் செயல்பட்டு வருகின்றன. மாணவியர்க கான விளையாட் விடுதிகள் ஈரோடு. திருவண்ணாமலை, நாமக்கல், திண்டுக்கல், நாகர்கோவில், பெரம்பலூர், தேனி, புதுக்கோட்டை, தருமபுரி மற்றும் சென்னை, ஜவஹர்லால் நேரு விளையாட்டரங்கம், திருச்சி, ஸ்ரீரங்கம்) மற்றும் திருநெல்வேலி ஆகிய இடங்களிலும், மாணவர்களுக்கான முதன்மை நிலை விளையாட்டு மைய விடுதி சென்னை, ஜவஹர்லால் நேரு உள் விளையாட்டரங்கம் மற்றும் ஈரோட்டிலும், மாணவர்களுக்கான முதன்மை நிலை விளையாட்டு மைய விடுதி சத்தூவாச்சாரி, வேலூர் ஆகிய இடங்களிலும் செயல்பட்டு வருகின்றன.
இந்த விளையாட்டு விடுதிகளில் உள்ள விளையாட்டுக்களில் பயிற்சி பெற்று சிறந்த விளையாட்டு வீரராக விளங்குவதற்கு 7-ம் வகுப்பு 8-ம் வகுப்பு, 9-ம் வகுப்பு மற்றும் 11-ம் வகுப்பு சேர்க்கையும் முதன்மை நிலை விளையாட்டு மையங்களில் பயிற்சி பெற்று சிறந்த விளையாட்டு வீரராக விளங்குவதற்கு 6-ம் வகுப்பு, 7-ம் வகுப்பு மற்றும் 8-ம் வகுப்பு ஆகிய வகுப்புகளின் சேர்க்கைக்கான மாவட்ட அளவிலான தேர்வுப்போட்டிகள் இன்று சேலம் காந்தி விளையாட்டரங்கத்தில் நடைபெற்றது. பயிற்சி கலகெடர் சங்கேத் பல்வந்த் வாகே தொடங்கி வைத்தார். இதில் மாவட்ட விளையாட்டு மற்றும் இளைஞர் நலன் அலுவலர் மற்றும் பயிற்றுநர்கள் பங்கேற்றனர். இத்தேர்வு போட்டியில் மாணவ-மாணவியர்கள் 108பேர் கலந்து கொண்டனர்.