உள்ளூர் செய்திகள்
சேலம் ஜெயிலில் ரகளை செய்த 6 கைதிகள் மீது வழக்கு பதிவு
- கோவை கைதிகள் 3 பேரையும் சிறை நிர்வாகம் சார்பில் 8-வது பிளாக்கில் இருந்து நிர்வாக வசதிக்காக டவர் பிளாக் பகுதிக்கு மாற்றினர்.
- இதற்கு அவரது நண்பர்களான 3 கைதிகள் எதிர்ப்பு தெரிவித்தனர்.
கொண்டலாம்பட்டி:
சேலம் மத்திய சிறையில் கோவை சரவணம்பட்டியை சேர்ந்த அஸ்வின்குமார் (29), சங்கர்கணேஷ் (22), பிரவீன் (25) ஆகியோர் அடைக்கப்பட்டிருந்தனர். மேலும் அவர்களது நண்பர்களான சோபன் (23), ராமன் (25) தீனா (25) ஆகியோரும் அடைக்கப்பட்டுள்ளனர்.
கோவை கைதிகள் 3 பேரையும் சிறை நிர்வாகம் சார்பில் 8-வது பிளாக்கில் இருந்து நிர்வாக வசதிக்காக டவர் பிளாக் பகுதிக்கு மாற்றினர்.இதற்கு அவரது நண்பர்களான 3 கைதிகள் எதிர்ப்பு தெரிவித்தனர். தொடர்ந்து இவர்கள் டியூப் லைட்டுகளை உடைத்து உடலில் கீறிக்கொண்டு ரகளையில் ஈடுபட்டனர்.
போலீசில் புகார்
இதுகுறித்து சிறை கண்காணிப்பாளர் மதிவாணன் அஸ்தம்பட்டி போலீசில் புகார் செய்தார். போலீசார் 6 கைதிகள் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் 3 கைதிகளையும், உறவினர்கள் 3 மாதம் சந்திக்க தடை விதிக்கப்பட்டுள்ளது.